Watch Video: குருகிராம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வேகத்தடை அமைக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆபத்தான வேகத்தடை
சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது போன்ற சாலை விதிகளை மீறுவதே, விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது. அவற்றை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. அந்த வகையில் அமைக்கப்பட்ட ஒரு வேகத்தடையே வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தானதாக மாறியுள்ளது. ஹரியானாவின் குருகிராமில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள வாகனங்கள் அனைத்தும், பறந்தபடியே அதனை கடந்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
காற்றில் பறந்த பிஎம்டபள்யூ கார்:
இதுதொடர்பான வீடியோவில், “ குறிப்பிட்ட வேகத்தடையை கடக்க முயன்றபோது, வேகமாக வந்த வெள்ளை நிற BMW சுமார் மூன்று அடி உயரத்திற்கு மேல் காற்றில் பறந்ததை காட்டுகிறது. வேகத்தடையில் இருந்து குறைந்தது 15 அடி தூரம் காற்றில் பறந்தபடி சென்று கார் அதிவேகமாக தரையிறங்கியபோது, அதன் பின்பக்க பம்பரில் இருந்து தீப்பொறிகள் பறந்தன. அந்த பகுதியில் வேகத்தடை இருப்பதற்கான முன்னறிவிப்புகளோ அல்லது எந்தவித அடையாளங்களோ இல்லாத காரணத்தால், இரண்டு பெரிய டிரக்குகளும் காற்றில் பறந்து குலுங்கியபடி தரையிறங்கின.
அரசு தரப்பு விளக்கம்:
குருகிராமில் உள்ள கோல்ஃப் கோர்ஸ் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள, வேகத்தடையால் தான் இந்த ஆபத்தான சூழல் நிலவுவதாக இணையவாசிகள் குறிப்பிட்டனர். தொடர்ந்து, HR26 தாபாவிற்கு எதிரே உள்ள கோல்ஃப் கோர்ஸ் மைதானத்தில் உள்ள சென்ட்ரம் பிளாசா கட்டிடத்திற்கு அருகில் அந்த வேகத்தடை இருப்பதாக பலரும் குறிப்பிடத் தொடங்கினர். குறைந்தது அந்த வேகத்தடை மீது வண்ணமாவது தீட்டியிருக்க வேண்டாமா எனவும் பலரும் கேள்வி எழுப்பினர். அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், உரிய நடவடிக்கைகளை எடுத்துவருவதாக குருகிராம் பெருநகர மேம்பாட்டு ஆணையம் விளக்கமளித்த்யுள்ளது.