கேரளாவில் பயங்கரம்... கோவில் திருவிழாவில் வெடித்து சிதறிய பட்டாசுகள் - நள்ளிரவு நடந்தது என்ன?

கேரளாவில் பிரசித்தி பெற்ற நீலேஸ்வரம் அஞ்சுதம்புலம் வீரர்காவு கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Continues below advertisement

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் அஞ்ஜோடம்பலம் வீரேகவு கோவில் திருவிழாவின்போது வெடிக்க வைத்திருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறின. இதனால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனா்.

Continues below advertisement

Gold Price Hike : அடித்து தூக்கிய தங்கம் விலை.. அதிர்ச்சியில் மக்கள்.. ரூ.59,000 ஆனது சவரன் மதிப்பு..

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் அஞ்ஜோடம்பலம் வீரேகவு கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்டை கிராமங்களில் இருந்து வருவார்கள். காசர்கோடுவில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நிலையில் நேற்று இரவு திருவிழாவின்போது பூஜை மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


அந்த சமயத்தில் கோவில் வளாகத்தில் வெடிப்பதற்கு வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து தீவிபத்து ஏற்பட்டது. கோவில் குடோனில் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியதால், அங்கிருந்த பக்தர்கள் ஓட்டம் பிடித்தனா். எனினும் அங்கிருந்தவர்கள் 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனா்.

 

10 அடிக்கும் மேல் தீ பற்றி எரிந்தது

திடீர் தீ விபத்தில் கோவில் பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. மேலும் 10 அடிக்கும் மேல் தீ பற்றி எரிந்தது. இதற்கிடையே தீ விபத்து குறித்து போலீசாருக்கும், தீயணைப்பு வாகனங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின்பேரில் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்தன.

New Head Coach:ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் புதிய பயிற்சியாளர்;வெளியான அறிவிப்பு!

இதையடுத்து கோவில் வளாகத்தில் பற்றி எரிந்த தீ நீண்ட நேரம் போராடி அணைக்கப்பட்டது. இதையடுத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. அப்போது காயமடைந்த 150 பேரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதில் 10 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் விவரம்:

கன்காங்காடு மருத்துவமனை- 16
சஞ்சீவனி- 10
பரியாரம் மருத்துவக்கல்லூரி- 5
ஐஷால் மருத்துவமனை- 17
அரிமலா கன்ஹாங்காடு- 3
கண்ணூர்- 18
கோழிக்கோடு- 2
செருவத்தூர்- 2
மன்சூர் மருத்துவமனை - 2
மங்களூரு ஏ.ஜே. மருத்துவ கல்லூரி- 18
தீபா மருத்துவமனை- 1


ஃபாசிச எதிர்ப்பை நையாண்டி செய்வதா? தவெக தலைவர் விஜய் மீது எம்பி திருமாவளவன் விமர்சனம்!

பட்டாசு வெடிவிபத்து குறித்து போலீசார் உடனடி விசாரணை நடத்தினா். அப்போது கோவில் திருவிழாவில், பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்படவில்லை என்பது தெரிந்தது. எனினும் கோவில் நிர்வாகிகள் சார்பில் பட்டாசுகள் வெடிப்பதற்கு வாங்கி அங்குள்ள குடோனில் வைக்கப்பட்டு இருந்துள்ளது. அந்த சமயத்தில் தவறுதலாக குடோனில் தீப்பிடித்து பட்டாசுகள் அனைத்தும் வெடிக்க தொடங்கியது தெரிந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Continues below advertisement
Sponsored Links by Taboola