திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்த இடையக்கோட்டை புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் அப்பகுதியில் கூலித்தொழிலாளியாக இருந்து வந்துள்ளார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். மேலும் அதை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியும் உள்ளார்.
பந்த் நடத்தினால் பாஜக மீது நடவடிக்கை... எச்சரித்த நீதிமன்றம்..! ஜகா வாங்கிய அண்ணாமலை..!
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தரப்பில் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி ஆஜராகி வாதாடினார்.
இந்தநிலையில் வழக்கு விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், குற்றம்சாட்டப்பட்ட முருகேசனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், மிரட்டல் விடுத்ததற்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
முதலமைச்சரின் பசும்பொன் பயணம் ரத்து... காரணம் இதுதான்! அறிக்கை மூலம் வெளியான விளக்கம்!
அதே போல திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த காமாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சிங்கராஜா. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி சரண் இந்த வழக்கை விசாரித்தார்.
பஸ்ஸில் ஆரம்பித்த பழக்கம்.. ஜூஸில் முடிந்த சோகம்.. நண்பனை நாசூக்காக கொன்றாரா தோழி..?
அரசு தரப்பில் வழக்கறிஞ்சர் ஜோதி ஆஜராகி வாதாடினார். இந்த நிலையில் வழக்கு விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட சிங்கராஜாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்