கொடைக்கானல் என்று அழைக்கப்படும் இந்த அழகிய மலைப்பிரதேசத்தின் பெயர் உண்மையாக கொடைக்கானல் என்பதே ஆகும். இன்னும் சொல்லப்போனால் கொடிகளால் சூழப்பட்ட காட்டுப்பகுதி என்பதுதான் இதன் அர்த்தம். கொடி என்றால் காடுகளில் மரங்களையோ அல்லது வேறு ஏதேனும் ஆதாரங்களைப் பற்றி வளரக்கூடிய, ஆங்கிலத்தில் Creepers என்று சொல்லப்படுகிற கொடிகள் என்று பொருள். கானல் என்றால் - காடு என்பது பொருள் (கானகம், வனம்).


தூங்க விடாத ஆசிரியை கனவு! காலை இழந்தும் பறவையாய் பள்ளிக்கு பறக்கும் 10 வயது சிறுமி! அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்




இதன் காரணம் கொண்டுதான், இப்பெயர் (கொடிக்கானல்) என அழைக்கப்பட்டது. (நாளடைவில் மறுவி கொடைக்கானலாக மாறியது) நிஜத்திலும் இந்த இடம் அப்படித்தான் இருந்தது. மிகுந்த  பரப்பளவும், அதிக அடர்த்தியாகவும், அநேக வன விலங்குகளின் வாழ்வாதாரமாகவும், பச்சை வர்ண பட்டு உடுத்திய அழகு தேவதையாகவும்  திகழ்ந்து வருகிறது  இந்த மலைகளின் இளவரசி.


இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழக நிவாரணப் பொருட்கள்! கோரிக்கை வைக்கும் தோணி தொழிலாளர்கள்!




அடர்ந்த வனப்பகுதியாக இருந்த கொடைக்கானலில் கடந்த 1845-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் உருவாக்கிய ஓய்வு இல்லத்தில் மே 26-ஆம் தேதி அன்று முதல் முதலாக குடியேற்றத்தை ஏற்படுத்தி, மெல்ல மெல்ல நகர பகுதியாக தொடங்கினர். இதனை அடிப்படையாகக் கொண்டு பழங்குடி மக்களை தவிர்த்து சமவெளிப்பகுதிகளில் இருந்தும், தரைப்பகுதிகளில் இருந்தும் முதலில் வெளிமனிதர்கள் குடியேறிய ஆண்டாக 1845-ஆம் ஆண்டு உள்ளது.


ABP Exclusive: ‛இந்தியாவின் மிகப்பெரிய தங்க செயினை வாங்கிய பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம்




இவ்வாறு வெளிமக்கள் குடியேறிய ஆண்டினை கொடைக்கானல் நகரம் பிறந்த தினமாக கடந்த சில ஆண்டுகளாக நகராட்சியால் கொண்டாடப்பட்டு வந்தது. இந்த நாளில் பல்வேறு தரப்பு பொதுமக்களுக்கும், வருகைபுரியும் சுற்றுலாப்பயணிகளுக்கும்  இனிப்புகள் வழங்கி சிறப்பாக நகராட்சியால் கொண்டாடப்படுவது வழக்கம்,


அதன்படி நேற்று, தனது 177-வது அகவையில் கொடைக்கானல் அடியெடுத்து வைத்தது. இதையொட்டி சமூக ஆர்வலர்கள், கொடைக்கானலுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். எத்தனை ஆண்டுகள் உருண்டோடி விட்டாலும், எழில் கொஞ்சும் இயற்கை அழகை தன்னகத்தே கொண்ட கொடைக்கானல் என்றும் மலைகளின் இளவரசியாகவே சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு விருந்து படைத்து கொண்டிருக்கிறாள் என்றால் அது மிகையல்ல.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண