திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை அடுத்த வேம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் விஜயகுமார் (55), பாலகுரு (50), ஜெயா என்ற ஜெயச்சந்திரன் (51). இவர்கள் 3 பேரும் சேர்ந்து எரியோட்டை அடுத்த கோவிலூரில் நகை அடகு கடை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதி மக்களிடம் இருந்து வைப்பு தொகையாக பணத்தை பெற்று குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர்களுக்கு வட்டியுடன் திருப்பி செலுத்தி வந்தனர். இதனால் அவர்கள் மீது அப்பகுதி மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. இதையடுத்து அந்த நகை அடகு கடையில் வைப்பு தொகையாக லட்சக்கணக்கில் பணத்தை பொதுமக்கள் செலுத்தினர்.


Breaking News Live: நரிக்குறவர் பெண்ணின் வீட்டிற்கு சென்று சாப்பிட்ட முதல்வர்..! குழந்தைக்கு ஊட்டிவிட்டு மகிழ்ச்சி..!




அந்த வகையில் குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த சுப்ரமணி உள்பட 13 பேரிடம் இருந்து,  1.75 கோடி வரை வைப்பு தொகையாக விஜயகுமார் உள்பட 3 பேரும் பெற்றனர். ஆனால் வைப்பு தொகைக்கான முதிர்வு தேதி கடந்த பின்னரும் சுப்ரமணி உள்பட 13 பேருக்கு பணம் திரும்ப செலுத்தப்படாமல் இருந்தது.இதையடுத்து அவர்கள் அடகு கடை உரிமையாளர்களை சந்தித்து பணத்தை கேட்பதற்காக கோவிலூர் சென்றனர்.


”புதுப்பேட்டை படத்துல குளியல் காட்சி ரொம்ப பிடிக்கும் “ - நடிகை சோனியா அகர்வால்


அப்போது அடகு கடை மூடப்பட்டு இருப்பதையும், அதன் உரிமையாளர்கள் பணத்துடன் தலைமறைவானதும் அவர்களுக்கு தெரியவந்தது. தாங்கள் மோசடி செய்யப்பட்டதையறிந்ததும் அதிர்ச்சியடைந்த அவர்கள், மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமாரிடம் இதுகுறித்து புகார் கொடுத்தனர்.அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார்.


ABP NADU 2nd Year ceremony : தொடர்ந்து பயணிப்போம்! இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ஏபிபி நாடு..!




அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஷாஜகான், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், விஜயகுமார் கோவிலூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து விஜயகுமாரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர், மதுரை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் தப்பியோடிய பாலகுரு, ஜெயச்சந்திரன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண