Breaking News Live: ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக புறக்கணித்திருக்கக்கூடாது - எல்.முருகன்

Breaking News LIVE: இன்றைய முக்கிய மற்றும் ப்ரேக்கிங் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

ABP NADU Last Updated: 15 Apr 2022 07:55 PM
ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக புறக்கணித்திருக்கக்கூடாது - எல்.முருகன்

ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக புறக்கணித்திருக்கக்கூடாது - எல்.முருகன்

நரிக்குறவர் பெண்ணின் வீட்டிற்கு சென்று சாப்பிட்ட முதல்வர்..! குழந்தைக்கு ஊட்டிவிட்டு மகிழ்ச்சி..!

ஆவடி அருகே உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கே உள்ள நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று சாப்பிட்டார். மேலும், அப்போது அங்கிருந்த குழந்தைக்கும் இட்லியை ஊட்டிவிட்டு மகிழ்ந்தார். 

கள்ளக்குறிச்சியில் விபத்தில் சார் ஆட்சியர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சங்கராபுரத்தில் காரில் சென்று கொண்டிருந்தபோது கார் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகிய காரில் சென்ற சார் ஆட்சியர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த 5 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். 

இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 949ஆக குறைவு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 949ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக  6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மலையாள புத்தாண்டு விஷூ வெகு விமர்சையாக கொண்டாட்டம்:

கேரள மக்களின் புத்தாண்டு பண்டிகையான விஷூ வெகு விமர்சையாக இன்று கொண்டாடப்படுகிறது.

கும்பக்கரை அருவியில் குளிக்க இருந்த தடை நீக்கம்

தேனி பெரியகுளம் அருகே இருக்கும் கும்பக்கரை அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அங்கு வெள்ள பெருக்கு குறைந்துள்ளதால் மீண்டும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு,புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்

தமிழ்நாடு,புதுச்சேரியில் இன்று முதல் 2 மாதங்களுக்கு மீன்பிடி தடைகாலம் தொடங்கியது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் தொடக்கம்:

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழாவின் தேரோட்டம் இன்று தொடங்கியது. 

Background

தமிழ்நாடு ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் வழங்கிய தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு பங்கேற்கவில்லை. 


மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று மீனாட்சியம்மன் -சுந்தேரஷ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இன்று மீனாட்சியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.