இந்தியாவின் தலைசிறந்த மற்றும் புகழ்பெற்ற ஊடக நிறுவனமாக விளங்கி வரும் ஏபிபி நிறுவனம் கடந்தாண்டு உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்காக தமிழிலும் ஏபிபி நாடு-ஆக கால்தடம் பதித்தது. வலைதளம் மற்றும் யூ டியூப் என இரு தளத்திலும் தமிழர்களுக்காக கால்தடம் பதித்த நமது ஏபிபி நாடுக்கு மக்கள் அளித்த அமோக ஆதரவால் நாங்கள் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.


கடந்தாண்டு ஏப்ரல் 14-ந் தேதி சித்திரைத் திருநாளால் தொடங்கிய எங்களது சேவை மக்கள் அளித்த அமோக வரவேற்பால் லட்சக்கணக்கான வாசகர்களையும், 3 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களையும் கடந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறது. ஏபிபி நாடு செய்தி நிறுவனத்தின் ஓராண்டு பயணத்தை வெற்றிப்பயணமாக்கிய வாசகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறோம்.




செய்திகளை விரைந்து தருவது, அரசியல் நிகழ்வுகளின் அடுத்தடுத்த மாற்றங்களை உங்கள் விரல் நுனிக்கே கொண்டு சேர்ப்பது மட்டுமின்றி விளையாட்டு மற்றும் சினிமா செய்திகளையும் அதன் சுவாரஸ்யம் குறையாமல் உங்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஏபிபி நாடு தொடர்ந்து உத்வேகத்துடனும், வேகத்துடனும் செயல்படும் என்பதை உங்களுக்கு உறுதியளிக்கிறோம்.






ஏபிபி நாடு நிறுவனத்தின் முதலாம் ஆண்டு நிறைவு விழா சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஹோட்டலில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற தமிழக நிதியமைச்சர் பி.டிஆர். பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன், பா.ம.க.வின் ஏ.கே.மூர்த்தி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட பல தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் பங்கேற்று தங்களது வாழ்த்துகளை பதிவு செய்தனர்.




நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது முகநூல் பக்கத்திலும், தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் தனது டுவிட்டர் பக்கத்திலும் ஏபிபி நாடு இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கு தங்களது வாழ்த்துகளை பதிவு செய்துள்ளனர்.


நமது ஏபிபி தமிழ் மட்டுமின்றி இந்தி, மராத்தி, பஞ்சாபி, ஆங்கிலம், தெலுங்கு என்று இந்தியாவின் பிரதான மற்ற 8 மொழிகளிலும் தனது சேவையை மக்களுக்கு அளித்து வருகிறது. ஏபிபி நாடு செய்தி நிறுவனத்தின் இந்த ஓராண்டு பயணம் நூற்றாண்டு பயணமாக தொடர எங்களுக்கு உற்ற துணையாக இருக்கும் வாசகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை சமர்ப்பிக்கிறோம்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண