நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-ஆவது பிறந்ததின விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜீ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, மத்திய அரசு டெல்லியில் நேதாஜியின் சிலையை நிறுவும் அதே சமயம் குடியரசு தின நிகழ்வில் வங்காளத்தை ஒதுக்குவது எப்படி நீதி ஆகும். இதன் மூலம் மத்திய அரசு செய்ய விரும்புவது என்ன என்று கேள்வி எழுப்பினார். “வங்காளத்திற்கு மட்டும் ஏன் இந்த பேதம்? எங்களின் கோரிக்கையின் அடிப்படையில் நேதாஜியின் சிலையை நிறுவும் திட்டத்தைத் துவக்கிவிட்டு குடியரசு தின பேரணியில் எங்களை ஒதுக்குவது ஏன்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.



மேலும் மத்திய அரசின் போக்கைத் தாக்கும் வண்ணம், “சில இயக்கங்கள் நாட்டைக் கூறு போடுவதில் கண்ணாய் இருக்கின்றன. அவர்களிடம் நான் வைக்க விரும்புவது ஒரே கோரிக்கை தான் – மகாத்மா காந்தி குறித்தும் சுவாமி விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்தும் வாசியுங்கள். அவர்கள் ஒருபோதும் நாட்டைக் கூறு போடுவது பற்றி யோசித்துப் பார்க்கவில்லை” என்று தெரிவித்தார்.


“தேசத்திற்காக உயிர் துறந்த வீரர்களின் மத்தியில் வேறுபாடு பார்ப்பது மத்திய அரசின் அரசியல் திட்டம். வங்காளம் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய வரலாற்றை யாராலும் அழிக்க முடியாது. அப்படி அழிக்க நினைக்கும் எவரும் நெருப்புடன் விளையாடுகிறார்கள்” என்று அமர் ஜவான் ஜோதியையும் தேசிய போர் நினைவிடத்தையும் இணைக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து அவர் இவ்வாறு தெரிவித்தார்.


மேலும் நேதாஜியின் இறப்பு குறித்து “மத்திய அரசு நாட்டுக்காகப் போராடிய வீரர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும். நேதாஜியின் பிறந்த தினத்தை நீங்கள் நினைவு கூறுகிறீர்கள். அவரின் இறப்பைக் குறித்து என்ன தகவல் உங்களிடம் இருக்கிறது?” என்று அவர் கேள்வி எழுப்பினார். “இன்றுவரை நேதாஜியின் இறப்பு குறித்து எந்த தகவலும் இல்லை. அதிகாரத்திற்கு வந்தவுடன் அவரின் இறப்பு குறித்த தகவல்களைத் திரட்டுவதாக உறுதி கொடுத்த அரசாங்கம் இன்று வரை ஒன்றுமே செய்யவில்லை” என்று அவர் குற்றம் சாட்டினார்.  


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்