டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ஹாலோகிராம் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். நேதாஜியின் 125ஆவது  பிறந்தநாளை முன்னிட்டு அவரது முப்பரிமாண மெய்நிகர் சிலை திறக்கப்பட்டுள்ளது. நேதாஜியை சிறப்பிக்கும் வகையில் கிரானைட்  சிலை அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிலை அமைக்கும் பணி நிறைவடையும் வரை அந்த இடத்தில் நேதாஜியின் ஹாலோகிராம் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 


 










இதன்பிறகு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திர போராட்டத்தில் நாட்டுக்கு மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்று கூறினார். இந்தியர்கள் மனதில் நம்பிக்கையை வளர்த்தவர் என்றும் பிரதமர் புகழாரம் சூட்டினார். மேலும், கடுமையான சோதனைகளை சந்தித்தபோதும், பிரிட்டீஷ் அரசுக்கு அடிபணிய மறுத்தவர் நேதாஜி என்றும் கூறினார் பிரதமர்.






 


முன்னதாக, இது வெறும் கிரானைட் சிலை மட்டுமல்ல, இந்தியாவின் சுதந்திரத்திற்காக அனைத்தையும் கொடுத்த பழம்பெரும் நேதாஜிக்கு உரிய அஞ்சலி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.


 






 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண