உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் எம்எல்ஏ விஜய் மிஸ்ராவின் மகன் விஷ்ணு மிஸ்ரா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விஜய் மிஸ்ராவின் மகன் விஷ்ணு மிஸ்ரா கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் மோசடி வழக்குகளின் கீழ் அம்மாநில சிறப்பு அதிரடிப்படை குழுவால் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2020ஆம் ஆண்டு முதலே விஷ்ணு மிஸ்ரா தலைமறைவாக இருந்து வந்த நிலையில் நேற்று (ஜூலை.24) கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து முன்னதாகப் பேசிய காவலர்கள், விஷ்ணு மிஸ்ராவைக் கைது செய்ய ₹25,000 வெகுமதி முன்னதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் அவர் சிக்காத நிலையில் பின்னர் ₹1 லட்சம் ரூபாயாக அத்தொகை உயர்த்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: படுக்கையில் சிறுநீர் கழித்த சிறுமிக்கு பிறப்புறுப்பில் சூடு வைத்த வளர்ப்புத் தாய்... மத்தியப் பிரதேசத்தில் கொடூரம்!
நான்கு முறை எம்.எல்.ஏவாக பதவி வகித்துள்ள விஷ்ணு மிஸ்ராவின் தந்தை விஜய் மிஸ்ரா மீது முன்னதாக அவரது உறவினர் கிருஷ்ண மோகன் திவாரி சொத்து அபகரிப்பு, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்றங்களை சாட்டினார். அதனைத் தொடர்ந்து விஜய் மிஸ்ரா 2020ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
தற்போது ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள விஜய் மிஸ்ராவின் மனைவி ராம் லல்லி முன்னதாக உயர் நீதிமன்றத்தில் விஜய் மிஸ்ராவுக்கு ஜாமீன் பெற்றுள்ளார்.
மறுபுறம் விஷ்ணு மிஸ்ரா கடந்த ஆகஸ்ட் 2020 முதலே தலைமறைவாக இருந்து வந்தார். தொடர்ந்து 2020, செப்டம்பர் மாதம் விஜய் மிஸ்ராவுக்கு எதிராக லுக் அவுட் சுற்றறிக்கையை காவல் துறையினர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Monkey Pox : சுற்றுலா வந்த இடத்தில் குரங்கம்மை பாதிப்பு..! தாய்லாந்தில் இருந்து கம்போடியா தப்பியோடிய நைஜீரிய வாலிபர்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்