மத்தியப் பிரதேசம், இந்தூரில் 9 வயது சிறுமி ஒருவர் தூக்கத்தில் படுக்கையிலேயே சிறுநீர் கழித்ததால் ஆத்திரமடைந்த அவரது வளர்ப்புத் தாய் சிறுமியின் பிறப்புறுப்பிலேயே சூடு வைத்துள்ளார்.


மீட்கப்பட்ட சிறுமி, 4 பிரிவுகளில் வழக்கு


தனது உறவுக்காரக் குழந்தையான இச்சிறுமியை 40 வயது மதிக்கத்தக்க அப்பெண் தத்தெடுத்து வளர்த்து வந்த நிலையில், அக்கம்பக்கத்தார், உறவுக்காரர்கள் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் முன்னதாக சிறுமியை அப்பெண்ணிடமிருந்து மீட்டுள்ளனர்.


இச்சம்பவத்தில் இதுவரை வளர்ப்புத் தாய் கைது செய்யப்படாத நிலையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 294 (துஷ்பிரயோகம்), 323 (கடுமையாகக் கையாளுதல்), 324 (ஆபத்தான ஆயுதங்கள் அல்லது வழிமுறைகளால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 506 (அச்சுறுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


மேலும் படிக்க: Crime : கன்னியாகுமரி: ''ஏமாத்திட்டாரு.. அதான் குத்திக்கொன்னுட்டேன்'' 100-க்கு போன் போட்ட பெண்! ஷாக்கான போலீசார்!


போக்சோ வழக்கு பதிய கோரிக்கை


இந்நிலையில், சிறுமி குறித்து முன்னதாகப் பேசிய குழந்தைகள் நலக் குழுவின் (CWC) தலைவர் பல்லவி போர்வால், சிறுமியின் பிறப்புறுப்புகளில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தலையில் சில முடிகள் பிடுங்கப்பட்டுள்ளதாகவும், உடலில் நகக் காயங்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


குழந்தையின் நிலையைப் பார்க்கும்போது, ​​வளர்ப்புத் தாய் வக்கிர மனப்பான்மையுடன் சிறுமியைக் கையாண்டுள்ளதாகவும், சிறுமியின் நிலையைக் கருத்தில் வளர்ப்புத் தாயின் மீது போக்சோ வழக்கையும் பதிய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


சிகிச்சையில் சிறுமி


இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், சிறுமியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் விரைவில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.




மேலும் படிக்க: Crime : காதலை ஏற்க மறுத்த 11ம் வகுப்பு மாணவி..! உயிருடன் எரித்துக்கொன்ற திருமணமான வாலிபர்..! ஒடிசாவில் கொடூரம்..!


Crime : தேசிய விருதுபெற்ற நடிகையின் முடியை இழுத்து, நடுரோட்டில் புரட்டி எடுத்த சகநடிகரின் மனைவி.. வைரலான வீடியோ.. நடந்தது என்ன..?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண