• யார் இந்த சுசில் குமார் - பீகார் அரசியலில் பாஜகவின் முகமாக மாறியது எப்படி? அரசியல் பயணம்


பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுசில் குமார் மோடியின் அரசியல் பயணம் தொடர்பாக இந்த தொகுப்பில் அறியலாம். பத்தாண்டுகளுக்கும் மேலாக பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதலமைச்சராகவும், மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான என்டிஏ கூட்டணியை வலுப்படுத்தியவராகவும் திகழ்ந்தவர் சுஷில் குமார் மோடி.  பல மாதங்களாக புற்றுநோய் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார். நிதிஷ் குமாரும், சுசில் குமார் மோடியும், "ராமர்-லட்சுமணன் ஜோடி" என்ற புகழப்பட்டனர்.  மேலும் படிக்க..



  • வாரணாசியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் - 6 கிமீ ரோட் ஷோ, 12 சி.எம்கள் பங்கேற்க திட்டம்


நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இதையொட்டி இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். அதற்கு முன்னதாக  பிரதமர் காலை 9 மணிக்கு தசாஷ்வமேத் கட்டில் (GHAT) உள்ள, மா கங்கைக்கு சென்று வழிபாடு நடத்தலாம். அவர் கங்கையில் நீராடவும் வாய்ப்புள்ளது. தொடர்ந்து நமோ கட்டிற்கு செல்லவும் வாய்ப்புள்ளது. அங்கிருந்து பாபா கால பைரவர் கோவிலுக்கு சென்று வழிபடுவார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று மோடி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.  இன்று  கங்கா சப்தமியுடன் புஷ்ய நட்சத்திரமும் வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க..



  • 4வது கட்ட மக்களவைத் தேர்தல்: 64% வாக்குகள் பதிவு: மே.வங்கம் முதலிடம் - 1998-க்கு பிறகு ஸ்ரீநகரில் ஜாஸ்தி!


ஜம்மு & காஷ்மீரின் ஸ்ரீநகர் தொகுதியில் 1998ம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை இல்லாத அளவிற்கு வாக்குகள் பதிவாகியுள்ளன.  நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், 3 கட்ட வாக்குப்பதிவானது கடந்த ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்தது. அதைதொடர்ந்து நேற்று 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, 96 மக்களவை தொகுதிகளில் நான்காவது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆந்திரா மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் பல அரங்கேறிய நிலையில், நான்காம் கட்டத்தில் மொத்தமாக சுமார் 64 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் படிக்க..



  • வெளிமாநில பணியாளர்கள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் - தெற்கு ரயில்வே அறிவுறுத்தல்!


பயணிகள், சக ஊழியர்களிடம் உரையாடுவதில் எவ்வித தடையும் இல்லாமல் இருக்க, இதர மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்கள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது. ரயில்வே நிலையங்களில் உள்ள டிக்கெட் வழங்கும் இடங்கள், ரயில் நிலையங்கள், டிக்கெட் பரிசோதகர், RPF ஊழியர்கள், ரயிலில் பாதுகாப்பிற்காக இருப்பவர்கள் உள்ளிட்டோர் பெரும்பாலும் இந்தி மொழியில் மட்டுமே பேசுவார்கள். மேலும் படிக்க..