தமிழ்நாடு:



  • ஓட்டு எண்ணும் நாளில் வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி பொதுமக்களுக்கு இடையூறின்றி பாதுகாப்பு ஏற்பாடு - சத்யபிரதா சாஹூ தகவல் 

  • கோயில் திருவிழாவில் தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் 

  • தமிழ்நாடு, புதுச்சேரியில் 11 ஆம்  வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு 

  • காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணத்தில் இன்னும் ஒரு வாரத்தில் தெளிவான முடிவு கிடைக்கும் - தென்மண்டல ஐ.ஜி. விளக்கம் 

  • திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது 

  • செல்லப்பிராணிகள் வளர்க்க சென்னை மாநகராட்சி கடும் கட்டுப்பாடு - உரிமம் பெற குவியும் விண்ணப்பங்கள் 

  • ராகுல்காந்தியுடன் நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடிக்கு அச்சம் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பேச்சு 

  • சாதி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு 

  • நாகை எம்.பி., செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார் - இன்று இறுதிச்சடங்கு, தலைவர்கள் இரங்கல் 

  • என் உயிருக்கு கோவை சிறையில் ஆபத்து இருப்பதாக சவுக்கு சங்கர் போலீசார் முன்னிலையில் கூச்சலிட்டதால் பரபரப்பு 

  • சிறுசேரி - கிளாம்பாக்கம் பதிலாக கேளம்பாக்கம், திருப்போரூர் வழியாக மாற்றுப்பாதையில் மெட்ரோ ரயிலை இயக்க அதிகாரிகள் பரிசீலனை 

  • பெற்றோர்களுக்கும், பள்ளிகளுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்துக்காக வாட்ஸ்அப் குரூப் தொடங்கும் பள்ளிக்கல்வித்துறை 


இந்தியா: 



  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில்குமார் மோடி காலமானார் - அரசியல் தலைவர்கள் இரங்கல்

  • விறுவிறுப்பாக நடந்த நாடாளுமன்ற தேர்தலின் 4ஆம் கட்ட வாக்குப்பதிவு - 62.84% வாக்குகள் பதிவானதாக தகவல்

  • மும்பையை தாக்கிய புழுதிப்புயலில் விழுந்த ராட்சத விளம்பரம் பதாகை - 9 பேர் உயிரிழந்த சோகம் 

  • கடத்தல் வழக்கில் எச்.டி.ரேவண்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் - சிறையில் இருந்து இன்று விடுதலையாகிறார்

  • 4 ஆம் கட்ட தேர்தலுக்கு பிறகு மோடி அலை சுனாமியாக மாறி விட்டது - யோகி ஆதித்யநாத் 

  • நான் உயிரோடு இருக்கும் வரை இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது - பிரதமர் மோடி 

  • ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் - காங்கிரஸின் “மகாலட்சுமி திட்டம்” வரப்பிரசாதம் என சோனியா காந்தி கருத்து

  • நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்
      


உலகம்:



  • தெற்கு ஆஸ்திரேலியாவில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை

  • நேபாளத்தில் துணை பிரதமர் திடீர் ராஜினாமாவால் பிரதமர் பிரசண்டா அரசுக்கு பின்னடைவு 

  • ராணுவ தலையீட்டை நிறுத்துமாறும் அமெரிக்காவின் 7 நட்பு நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை 

  • பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட நபர் 2 மாதங்களில் உயிரிழப்பு 


விளையாட்டு: 



  • ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் டெல்லி - லக்னோ அணிகள் நேருக்குநேர் மோதல் 

  • ஐபிஎல் போட்டியில் மழை காரணமாக கொல்கத்தா, குஜராத் அணிகள் இடையே ஆட்டம் ரத்து - இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது

  • இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் - விண்ணப்பங்களை அனுப்புமாறு பிசிசிஐ பரிந்துரை 

  • தமிழக செஸ் வீரர் ஷாம் நிக்கில் இந்தியாவின் 85வது கிராண்ட் மாஸ்டர் ஆகி சாதனை