- கொளுத்தும் வெயில்.. மக்கள் வெளியே வர வேண்டாம் - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் கோடை காலம் ஆரம்பித்து வெயில் சுட்டெரித்து வருகிறது. ஈரோட்டில் அதிகபட்சமாக இதுவரை 109 டிகிரி வரை பதிவாகியுள்ளது. ஈரோடை தொடர்ந்து கரூர், திருச்சி, சேலம், கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிகபட்சமான வெயில் பதிவாகி வருகிறது. சென்னையை பொறுத்தவரை அவ்வப்போது 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. அந்த வகையில் மே 1 ஆம் தேதி முதல் 3 தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க..
- இந்தியாவிலே தமிழ்நாட்டில் முதன்முதலாக கொண்டாடப்பட்ட மே தினம்; யார் இந்த சிங்கார வேலு
முன்பு, உலக அளவில் எடுத்து கொண்டாலும் தொழிலாளர்கள் பல மணி நேரம் உழைத்தனர். இதனால், அவர்கள் சொந்த விசயங்களை கூட கவனிக்க முடியாத நிலை இருந்தது. சில இடங்களிகளில் 16 மணி நேரம் கூட வேலை இருந்ததாக வரலாற்று நிகழ்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தொழிற்புரட்சி ஏற்பட்ட 18 ஆம் நூற்றாண்டுகளில் தொழிலாளர்களின் உழைப்பானது சுரண்டபட்டது என்றே சொல்லலாம். அவ்வப்போது சில இடங்களில் அங்கும் இங்குமாக தொழிலாளர்கள் உரிமை குறித்து போராட்டங்கள் எழுந்தன. ஒரு கட்டத்தில் போராட்டமானது பல இடங்களுக்கு பரவ ஆரம்பித்தது. மேலும் படிக்க..
- உழைப்பாளர் தினத்தில் மகிழ்ச்சி செய்தி! - வணிக சிலிண்டர் விலை ரூ.19 குறைந்தது!
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.19 குறைக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் சந்தை விலை நிலவரங்களுக்கு ஏற்ப வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக சிலிண்டர் விலையானது மாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் வணிக சிலிண்டரை எடுத்துக் கொண்டால் கடந்த 3 மாதத்தில் ஏற்றம் இறக்கமாகவே காணப்படுகிறது. சென்னையில் மார்ச் 1 ஆம் தேதி வணிக சிலிண்டர் விலை ரூ.23.50 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.1,960 ஆக விற்பனை செய்யப்பட்டது. மேலும் படிக்க..
- 30 கி.மீ வேகத்திற்கு மேல் சென்றால் கடும் நடவடிக்கை - சேலம் ஆட்சியர் எச்சரிக்கை
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து தனியார் பயணிகள் பேருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. மாலை நேரம் என்பதால் பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. 13 வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் பேருந்து வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்தை நோக்கி பாய்ந்து விபத்திற்குள்ளானது. 13 வது கொண்டை ஊசி வளைவில் இருந்து விழுந்த பேருந்த 11 வது கொண்டை ஊசி வளைவில் வந்து நின்றது. இந்த விபத்தில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்த்தும், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். மேலும் படிக்க..