முன்பு, உலக அளவில் எடுத்து கொண்டாலும் தொழிலாளர்கள் பல மணி நேரம் உழைத்தனர். இதனால், அவர்கள் சொந்த விசயங்களை கூட கவனிக்க முடியாத நிலை இருந்தது. சில இடங்களிகளில் 16 மணி நேரம் கூட வேலை இருந்ததாக வரலாற்று நிகழ்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தொழிற்புரட்சி ஏற்பட்ட 18 ஆம் நூற்றாண்டுகளில் தொழிலாளர்களின் உழைப்பானது சுரண்டபட்டது என்றே சொல்லலாம்.


போராட்டங்கள்:


அவ்வப்போது சில இடங்களில் அங்கும் இங்குமாக தொழிலாளர்கள் உரிமை குறித்து போராட்டங்கள் எழுந்தன. ஒரு கட்டத்தில் போராட்டமானது பல இடங்களுக்கு பரவ ஆரம்பித்தது.  இங்கிலாந்து, ,அமெரிக்கா,பிரான்ஸ்  உள்ளிட்ட நாடுகளில் தொழிலாளர்களின் புரட்சி உத்வேகம் அடைய ஆரம்பித்தது.


1886ஆம் ஆண்டு அமெரிக்காவின் , சிகாகோவில் நடந்த தொழிலாளர் போராட்டம் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. அப்போராட்டத்தில் காவல்துறையினரால், தொழிலாளர்கள் பெரும் தாக்குதல்களுக்கு உள்ளானார்கள்.




 


image credits: @pixabay


மே 1 தீர்மானம்:


இதையடுத்து, 1889 ஆம் ஆண்டு பாரீசில் சர்வதேச தொழிலாளர் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் 8 மணி நேர வேலை, மே 1 தேதி முதல் உலகளாவிய தொழிலாளர் தினம் கொண்டாட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை 1923 ஆம் ஆண்டுதான் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. அதுவும் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் முதல் முறையாக மே தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு காரணமானவராக திகழ்பவர் சிங்கார வேலர்தான்.


20 ஆம் நூற்றாண்டுகளில் தொடக்கத்தில், காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், கம்யூனிஸ்ட் சித்தாந்தவாதியான சிங்கார வேலர், தொழிலாளர்களின் பொருளாதாரம், பணி நேரம் உள்ளிட்ட உள்ளிட்ட கோரிக்கைகள், தொழிலாளர்களுக்கு உரிமைகளாக மாற வேண்டும் என அவ்வப்போது, சென்னை மாகாணத்தில் தொழிளார்களை திரட்டி போராட்டம் நடத்தி வந்தார்.


இதையடுத்து, காங்கிரஸ் கட்சியானது சிங்காரவேலர், சுவாமி தீனாநாத், சி.எஃப். ஆண்ட்ரூஸ், எஸ்.என்.ஹால்டர், டாக்டர் டி.டி.சத்யா, ஜே.எம்.சென் குப்தா ஆகிய 6 பேர் கொண்ட AITUC என்ற தொழிலாளர்களுக்கான அமைப்பை ஏற்படுத்தியது .  


லேபர் கிசான் கட்சி:


அயல்நாடுகளில் மே தினம் கொண்டாடப்படுவது போல, இந்தியாவிலும் மே தினம கொண்டாடப்பட வேண்டும் என் சிங்கார வேலர் தெரிவித்தார். இதையடுத்து, 1923 ஆம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரை கூட்டத்தில் சிங்காரவேலர் தலைமையேற்று விழாவை நடத்தினார். லேபர் கிசான் கட்சி என்கிற புதிய கட்சி தொடங்கினார்.  இதையடுத்து, காங்கிரஸ் கட்சியில் சுதந்திர போராட்ட தலைவராக பார்க்கப்பட்ட சிங்கார வேலர் , தனித்துவமிக்க தலைவராகவும் பார்க்கப்பட்டார்.


கட்சியின் அறிவிப்பை வெளியிட்டு, தங்கள் கட்சியின் கொள்கை குறித்தும் தொழிலாளர்கள் நலன் குறித்து உரையாற்றினார். மேலும் இந்த கட்சியானது,  காங்கிரஸ் கட்சியின் கிளை அமைப்பாகவே லேபர் கிசான் கட்சி செயல்படும் என்றும் தெரிவித்தார்.




மே தினம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இது  தொடர்பாக, கல்கத்தாவுக்கு தந்தி ஒன்றும் அனுப்பப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டதாவது, 'சென்னையில், சிங்காரவேலு தலைமையில் மே தினத்தில் லேபர் கிசான் கட்சி தொடங்கப்பட்டது.. மே தினத்தை விடுமுறையாக அறிவிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. தொழிலாளர் விடுதலைக்கு உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமை தேவை எனவும் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து , இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மே தினம் கொண்டாடப்படும் முறையை நடைமுறைக்கு வர ஆரம்பித்தது.


இந்தியாவிலேயே , தமிழ்நாட்டில்தான் மேதினம் முதன்முதலில் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலே மேதினம் கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் சிங்கார வேலர் என்றால் மிகையில்லை.


Also Read: Grama Sabha Meeting: மக்களே... உழைப்பாளர் தினத்தன்று கிராம சபை கூட்டம் - தமிழக அரசு அறிவிப்பு