• மகளிர் தின ஜாக்பாட்.. சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு - பிரதமர் மோடி அறிவிப்பு!


மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பரிசாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் பெண்களுக்கு தங்கள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இப்படியான நிலையில் இந்த நாளை மேலும் சிறப்பாகும் வகையில் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க..



  • மகளிர் தினத்தில் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசுகள்.. மத்திய அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன?


நேற்றைய தினம் 6 முக்கிய முடிவுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதில் ஒன்று  சர்வதேச மகளிர் தினத்திற்காக பெண்களுக்கு வழங்கப்படும் பரிசு என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்த ஆறு முடிவுகள் பற்றி விரிவாக பார்க்கலாம். பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் (PMUY) பயனாளிகளுக்கு, 14.2 கிலோ சிலிண்டர்  ரூ.300 என்ற இலக்கு மானியத்தை ஆண்டுக்கு 12 முறை பெற மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. ஏப்ரல் 1, 2024 முதல் மார்ச் 31, 2025 வரை பயனாளிகள் இந்த திட்டத்தை பெறலாம் என்றும் இதற்காக  ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க..



  • “ராமர் என்னடா செஞ்சாரு? .. ஸ்டாலின் ராஜ்ஜியம் தொடரணும்” - இயக்குநர் கரு.பழனியப்பன் பேச்சு


வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் ராஜ்ஜியம் தொடர வேண்டும் என இயக்குநர் கரு.பழனியப்பன் கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இயக்குநர் கரு.பழனியப்பன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “திராவிட முன்னேற்ற கழகத்தின் வரலாற்றில் எப்படி செப்டம்பர் மாதம் முக்கியமான மாதமோ, அதேபோல் மார்ச் மாதமும் முக்கியமான மாதமாகும். மார்ச் 1 முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள், மார்ச் 3 ஆம் தேதி பேரரறிஞர் அண்ணா, தந்தை பெரியாரும் 1968ல் கழகம் ஆட்சி அமைத்த பின் இருவரும் 18 ஆண்டு காலம் கழித்து சந்தித்துக் கொண்ட நாளாகும். மேலும் படிக்க..



  • என்னங்க இது? தகர நாற்காலி போல விமானத்தில் இருக்கை - இண்டிகோ பயணிகள் அதிர்ச்சி


இண்டிகோ விமானத்தில் நாள்தோறும் பல பயணிகள் பயணித்து வருகிறார்கள். சில தருணங்களில் விமான சேவை குறித்து பயணிகள் கருத்து தெரிவிப்பது சர்ச்சைக்கு உள்ளாகும். இந்நிலையில், நேற்று ( 07-03-2023 ) பெங்களூரில் இருந்து போபாலுக்கு இண்டிகோ விமானத்தில் சென்ற பயணி ஒருவர் ட்விட்டரில் பதிவை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தெரிவித்ததாவது, 6E 6465 என்ற எண் கொண்ட விமானத்தில், அமரும் இருக்கைகள் இல்லாமல் மிக கடுமையாக சேதமடைந்து இருப்பதாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். மேலும் படிக்க..



  • அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் - அமைச்சர் பியூஷ் கோயல்


ஜனவரி 1, 2024 முதல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார். மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள திட்டங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள திட்டங்கள் குறித்து தெரிவித்தார். அப்போது தெரிவித்ததாவது, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் படிக்க..