இண்டிகோ விமானத்தில் நாள்தோறும் பல பயணிகள் பயணித்து வருகிறார்கள். சில தருணங்களில் விமான சேவை குறித்து பயணிகள் கருத்து தெரிவிப்பது சர்ச்சைக்கு உள்ளாகும்.
குஷன் இல்லாத இருக்கை:
இந்நிலையில், நேற்று ( 07-03-2023 ) பெங்களூரில் இருந்து போபாலுக்கு இண்டிகோ விமானத்தில் சென்ற பயணி ஒருவர் ட்விட்டரில் பதிவை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தெரிவித்ததாவது, 6E 6465 என்ற எண் கொண்ட விமானத்தில், அமரும் இருக்கைகள் இல்லாமல் மிக கடுமையாக சேதமடைந்து இருப்பதாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவையடுத்து, பலரும் பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அந்த பதிவையடுத்து, சில சமயங்களில் உணவு சரியாக இருப்பதில்லை என்றும் சிலர் கருத்துக்களை பதிவிட்டனர்.
பதிலளித்த இண்டிகோ:
இதற்கு பதிலளித்த இண்டிகோ நிறுவனம், துப்புரவு நோக்கங்களுக்காக விமானத்தின் முன் இருக்கைகள் மாற்றப்பட்டன. இருக்கைகள் குறித்து, எங்களது பணியாளர்கள் பயணிக்கு முன்னதாகவே தெரிவித்தனர். தூய்மை பணியின் போது இதுபோன்ற செய்வது வழக்கமான நடைமுறைதான்.
எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிக உயர்ந்த, தரமான, தூய்மை மற்றும் சுகாதாரத்தை வழங்குவதில் உறுதியாக உள்ளோம் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்தது.
Also Read: விமான ஓடுதளத்தில் உட்கார்ந்து சாப்பிட்ட பயணிகள்! இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.1.20 கோடி அபராதம்!