இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்.. 43,051 மையங்கள் அமைப்பு
தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் தவறாமல் மருந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் இந்த சொட்டு மருந்து முகாம் மாலை 5 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 43,051 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.சொட்டு மருந்து முகாம்களில் 2 லட்சத்துக்கும் அதிகமான பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகின்றனர். மேலும் படிக்க
அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராம் நியமனம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் பாஜகவில் இருந்த காயத்ரி ரகுராம்,கட்சியில் உள்ள உறுப்பினர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கட்சியிலிருந்து விலகினார் . இதையடுத்து, மாநில தலைவர் அண்ணாமலையை கடும் விமர்சனம் செய்து வந்தார். மேலும் படிக்க
சூடுபிடிக்க தொடங்கிய தேர்தல் களம் - முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்த பாஜக
மக்களவைத் தேர்தலுக்காக இந்தியா முழுவதும் உள்ள கட்சிகள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் எதிர்கட்சிகள் இணைந்து I.N.D.I.A கூட்டணியை உருவாக்கி களமிறங்க தயாராக உள்ளது. இதனிடையே பாஜக் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 195 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக வாராணாசி தொகுதியில் களமிறங்கவுள்ளார். மேலும் படிக்க
பெண்கள் பிரீமியர் லீக் - வெற்றிக்காக ஏங்கும் குஜராத் அணி.. டெல்லியுடன் இன்று மோதல்!
பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் குஜராத் - டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியானது பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் குஜராத் அணி 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியையும் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் முதல் வெற்றி பெற குஜராத் அணி முழு மூச்சுடன் களமிறங்குகிறது. மேலும் படிக்க
திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்கள் சீரமைப்பு புதிய வட்டமாக திருவோணம் உதயமாகியுள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி காவாளப்பட்டி, சில்லத்தூர். திருநெல்லூர், வெங்கரை ஆகிய 4 குறு வட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி திருவோணம் வட்டம் உருவாகியுள்ளது. மேலும் படிக்க