அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த காயத்ரி ரகுராம், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்க கழகத்தின் மகளிர் அணி துணைச் செயலாளராக என்னை நியமித்து இருக்கும் கழக பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அய்யா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் வெற்றிக்காக உழைத்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் வழியில் கழகத்தை நடத்திச் செல்லும் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அய்யா அவர்களின் பொற்கரங்களில் கழகத்தின் மகத்தான வெற்றியை சமர்பிப்போம்” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பாஜகவில் இருந்த காயத்ரி ரகுராம், பாஜக கட்சியில் உள்ள உறுப்பினர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக கட்சியிலிருந்து விலகினார் . இதையடுத்து, மாநில தலைவர் அண்ணாமலையை கடும் விமர்சனம் செய்து வந்தார்.
இந்நிலையில், இன்று அதிமுக-வின் மகளிர் அணி துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதற்கான அறிவிப்பை, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
Power Pages-1: இந்தி எதிர்ப்பு முதல் இறுதிபயணம் வரை! தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்த அண்ணா!