தமிழ்நாடு:
- தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் - 43,051 மையங்களில் நடைபெறும் என அறிவிப்பு
- சென்னையில் முக்கிய இடங்களில் ஏர்டெல் சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் கடும் அவதி
- மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நாளை திறப்பு - இன்று ரயில் மூலம் செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்
- ஆவினில் ஐஸ்கிரீம் விலை உயர்வு - இன்று முதல் அமலுக்கு வருகிறது
- சென்னையில் நாளை பாஜக பொதுக்கூட்டம் - பிரதமர் மோடி கலந்து கொள்வதால் பலத்த பாதுகாப்பு
- அய்யா வைகுண்டர் அவதார திருநாள் விழா - அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
- அதிமுக மகளிரணி துணைச் செயலாளராக காயத்ரி ரகுராம் நியமனம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- திருக்கோவிலூர், விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் - தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தகவல்
- தஞ்சாவூரில் புதிய திருவோணம் வட்டம் உருவாக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி
- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் நாளை முதல் 4 நாட்கள் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் - மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்
- மாமல்லப்புரம் அருகே கடலில் ராட்சத அலையில் சிக்கி மாணவர் உயிரிழப்பு - 4 பேர் மாயம்
- பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் பதவிக்காலத்தை நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
- பராமரிப்பு காரணமாக 44 மின்சார ரயில்கள் இன்று ரத்து - சென்னை கடற்கரை, தாம்பரம் வழித்தடத்தில் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்
இந்தியா:
- மக்களவை தேர்தலுக்கான பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - பிரதமர் மோடி மீண்டும் வாரணாசியில் போட்டி
- பாஜக கூட்டணியிலேயே எப்போதும் நீடிப்பேன் - பிரதமர் மோடியிடம் நேரடியாக வாக்குறுதி கொடுத்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார்
- ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு - விசாரணைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
- பீகாரில் ரூ.34,800 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
- பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் - குற்றவாளிகள் தப்பிக்கவே முடியாது என மாநில அரசு திட்டவட்டம்
- பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது
- அம்பானி வீட்டு திருமணத்துக்கு ஜாம்நகர் விமான நிலையத்துக்கு 10 நாட்கள் சர்வதேச அந்தஸ்து - பலரும் கடும் கண்டனம்
- தபால் வாக்கு மூலம் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 85 ஆக உயர்வு - இந்திய தேர்தல் ஆணையம் தகவல்
- 5 நாட்கள் ஓய்வுக்குப் பின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மீண்டும் நடைபயணம் தொடங்கிய ராகுல் காந்தி
உலகம்:
- ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் செங்கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்
- ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம் - ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவு
- போர் நடைபெறும் காசாவில் விமானம் மூலம் உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை வீச அமெரிக்கா திட்டம்
- பாகிஸ்தான் அரசியல் பரபரப்பு - ஆசிப் அலி சர்தாரிக்கு எதிராக முகமது கானை குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவித்தார் இம்ரான் கான்
விளையாட்டு:
- மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்; பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை அணி
- ஐபிஎல் தொடருக்கான பயிற்சியை தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி - விரைவில் சென்னை வருகிறார் தோனி
- மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் - இன்றைய ஆட்டத்தில் குஜராத், டெல்லி அணிகள் மோதல்
- ஐஎஸ்எல் கால்பந்து தொடர்; சென்னை - ஒடிசா அணிகள் இன்று மோதல்