பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் குஜராத் - டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது. 


ஐபிஎல் போட்டிகளை போலவே பெண்களுக்கு கிரிக்கெட் தொடர் நடத்த வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை ஒருவழியாக கடந்தாண்டு நிறைவேறியது. அதன்படி WPL எனப்படும் பெண்கள் பிரீமியர் லீக் போட்டியின் 2வது சீசன் நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டித்தொடரில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரப்பிரதேச வாரியர்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. 






இதில் இன்று நடைபெறும் 10வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகிறது. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியானது பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. மெக்லானிங் தலைமையிலான டெல்லி அணி இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி ஒரு தோல்வியுன் கண்டுள்ளது. அந்த அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. இதேபோல் குஜராத் அணி 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியையும் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது. 


இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி தங்களது முதல் வெற்றியைப் பதிவு செய்ய முனைப்பு காட்டி வருகிறது. இதனால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. 


அணிகளின் உத்தேச விவரம் 


குஜராத் அணி: லாரா வோல்வார்ட், பெத் மூனி (கேப்டன்), ஹர்லீன் தியோல், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், ஆஷ்லே கார்ட்னர், தயாளதன் ஹேமலதா, கேத்ரின் புரூஸ், சினே ராணா, தனுஜா கன்வர், மேக்னா சிங், மன்னத் காஷ்யப்


டெல்லி அணி: மெக் லானிங்(கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆலிஸ் கேப்ஸி, மரிசானே கப், ஜெஸ் ஜோனாசென், அருந்ததி ரெட்டி, மின்னு மணி, தனியா பாட்டியா, ராதா யாதவ், ஷிகா பாண்டே




மேலும் படிக்க: ICC Trophy: அடுத்த 15 மாதங்களில் 3 ஐசிசி கோப்பைகளை வெல்ல இந்தியாவுக்கு வாய்ப்பு.. சரித்திரம் படைப்பாரா ரோஹித்?