•  தொடங்கியது இறுதிகட்ட நாடாளுமன்ற தேர்தல்: இன்று 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு


மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை (ஜூன் 1) அதாவது இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் மொத்தம் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. உ.பி-பஞ்சாப்பில் அதிகபட்சமாக தலா 13 இடங்களில் தேர்தல் நடைபெறுகிறது. பீகாரில் 8, சண்டிகரில் 1, இமாச்சலப் பிரதேசத்தில் 4, ஜார்க்கண்டில் 3, ஒடிசாவில் 6, பஞ்சாப்பில் 13, உத்தரப் பிரதேசத்தில் 13 மற்றும் மேற்கு வங்கத்தில் 9 இடங்கள் என மொத்தம் 57 தொகுதிகளில் தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும் படிக்க..