இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், 3 மணி நிலவரம் சற்று முன் வெளியானது. இதன்பாடு, 7ம் கட்ட தேர்தலில் 3 மணி வரை 49.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சண்டிகர் மற்றும் பீகாரில் குறைந்தபட்சமாக 35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் அதிகபட்சமாக 48.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.


மக்களவை தேர்தல் 2024ன் கடைசிக்கட்ட தேர்தலில் 1 மணி நிலவரப்படி 40.09% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 26.20% வாக்குகள் பதிவாகி உள்ளன.


மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை (ஜூன் 1) அதாவது இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் மொத்தம் 57 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. உ.பி-பஞ்சாப்பில் அதிகபட்சமாக தலா 13 இடங்களில் தேர்தல் நடைபெறுகிறது. பீகாரில் 8, சண்டிகரில் 1, இமாச்சலப் பிரதேசத்தில் 4, ஜார்க்கண்டில் 3, ஒடிசாவில் 6, பஞ்சாப்பில் 13, உத்தரப் பிரதேசத்தில் 13 மற்றும் மேற்கு வங்கத்தில் 9 இடங்கள் என மொத்தம் 57 தொகுதிகளில் தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 


இதில் பிரதமர் மோடி உட்பட 904 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் போட்டிடுகிறார். 


இந்திய நாடாளுமன்ற தேர்தலின் அட்டவணை கடந்த 16ஆம் தேதி வெளியாகிய நிலையில் வெற்றிகரமாக இதுவரை 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில்தான் இன்று 7ஆம் கட்ட தேர்தல் நடக்கிறது. 


முதல் கட்ட தேர்தலில் 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அதில் தமிழகத்திற்கான 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி உட்பட 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. 


இதையடுத்து ஏப்ரல் 26, மே 7, 13,20 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல்கள் முடிவடைந்துள்ளன.


முக்கிய வேட்பாளர்கள் யார் யார்..? 


ஏழாவது கட்ட தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதல் மிசா பாரதி வரை பல பேர் தேர்தலில் களமிறங்குகின்றன. வாரணாசியில் இருந்து பிரதமர் மோடி, கோரக்பூர் தொகுதியில் ரவி கிஷன், பாட்னா சாஹிப்பில் ரவிசங்கர் பிரசாத், பாட்லிபுத்ராவில் இருந்து மிசா பார்தி, பாஜகவின் கங்கனா ரனாவத் களத்தில் உள்ளனர். இதுபோக, காங்கிரஸில் இருந்து விக்ரமாதித்ய சிங் மண்டி தொகுதியிலும்,  டிஎம்சி தலைவர் அபிஷேக் பானர்ஜி டயமண்ட் ஹார்பர் தொகுதியிலும் போட்டியிடுகின்றன. 


கோரக்பூரில் முதல்வர் யோகி வாக்களித்தார்:







உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் உள்ள கோரக்நாத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.


 சாதனை எண்ணிக்கையில் வாக்களியுங்கள் - பிரதமர் மோடி:






ஏழாவது கட்ட வாக்குப்பதிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். "இன்று மக்களவை தேர்தல் 2024 இன் கடைசிக் கட்டமாகும். இளைஞர்கள் மற்றும் பெண் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று நான் நம்புகிறேன். நமது ஜனநாயகத்தை மேலும் துடிப்பாகவும், பங்கேற்புடனும் மாற்றுவோம்" என்றார்.