சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன. அந்த வகையில் வணிக சிலிண்டரை எடுத்துக் கொண்டால் கடந்த 3 மாதத்தில் ஏற்றம் இறக்கமாகவே காணப்படுகிறது. இந்தநிலையில், இன்று ஜூன் 1ம் தேதி என்பதால் வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.


அதன்படி, சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.70.50 குறைந்துள்ளது. இதையடுத்து சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ. 1, 840.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மே 1ம் தேதி 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 1, 911க்கு விற்பனை செய்யப்பட்டது. 


மேலும், வீட்டு பயன்பாட்டுக்காக சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ. 818.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


திடீரென குறைந்த காரணம்..? 


மக்களவை தேர்தலுக்கான கடைசிக்கட்ட தேர்தல் இன்று 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. முன்னதாக, இதுவரை 6 கட்டமாக வாக்குப்பதிவுகள் வெற்றிக்கரமாக நடந்து முடிந்தது. தேர்தல் காரணமாக இந்த வணிக சிலிண்டர்களின் விலை குறைவு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. பொதுவாக, ஏதேனும் தேர்தல் நடைபெற்றால் அது அத்தியாசவசிய விலை மற்றும் பெட்ரோல், சிலிண்டர்களில் விலையின் பொறுத்தே வாக்குப்பதிவில் எதிரொலிக்கும். அதன் அடிப்படையில் இந்த விலை குறைவு ஏற்பட்டிருக்கலாம் என மக்கள் கருதுகின்றனர்.