✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

ADSP வெள்ளத்துரை சஸ்பெண்ட் ரத்து - உள்துறை செயலாளர் அதிரடி உத்தரவு

செல்வகுமார்   |  01 Jun 2024 12:01 AM (IST)

ADSP Vellathurai :ADSP வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தமிழ்நாடு உள்துறை செயலாளர் அதிரடி உத்தரவு  பிறப்பித்துள்ளார். 

ADSP வெள்ளத்துரை

ADSP வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தமிழ்நாடு உள்துறை செயலாளர் அதிரடி உத்தரவு  பிறப்பித்துள்ளார். 

காவல் துறையில் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் வெள்ளத்துரை, ஓய்வு பெறுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, பணி நீக்கம் செய்யப்பட்டது காவல் துறையினர் மத்தியில் மட்டுமல்ல பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பாச்சேத்தியில் ஜூன் 6, 2013 அன்று ராமு என்கிற (26) என்கிற குமார் என்ற கொக்கி குமார் என்பவர்,  போலீஸ் காவலில் இருந்த போது மரணமடைந்த வழக்கில் அவருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு வழக்கில், தற்போது ADSP வெள்ளத்துரை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

இந்நிலையில், தற்போது ADSP வெள்ளத்துரை சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தமிழ்நாடு உள்துறை செயலாளர் அதிரடி உத்தரவு  பிறப்பித்துள்ளார். 

மேலும், ADSP வெள்ளத்துரை நாளையுடன் ஓய்வு பெற தமிழ்நாடு அரசு நிபந்தனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்துடன், 2 வழக்குகளில் மொத்தம் ரூ. 5 லட்சம் பிடித்தம் செய்யப்படும் எனவும் தமிழ்நாடு உள்துறை அறிவித்துள்ளது. இத்தொகையானது, ஓய்வுக்கு பின்னர் அரசு வழங்கும் தொகைகளில் இருந்து பிடித்தம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADSP வெள்ளத்துரை:

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை பணியில் இருந்து இன்று ஓய்வு பெற இருந்த நிலையில், ஒரு நாளைக்கு முன்னதாக நேற்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  2004ல் வனக் கொள்ளையர் வீரப்பனை சுட்டுக் கொன்றதாகக் கருதப்படும் காவல்துறை அதிகாரியான வெள்ளத்துரை, அயோத்திக்குப்பம் வீரமணியை மெரினாவில் என்கவுண்டரில் கொன்றதன் மூலம் கவனம் பெற்றார்.

உதவி காவல் ஆய்வாளராக பணியைத் தொடங்கிய இவர்,  கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணி உயர்வு பெற்றார் .   பின்னர் திருவண்ணாமலையில், மாவட்ட குற்றவியல் ஆவண காப்பாக ஏடிஎஸ்பி ஆக பணியாற்றி வந்தார்.

அவரது பணிக்காலம் இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில், வெள்ளத்துரையை பணியிடை நீக்கம் செய்து மாநில உள்துறை உத்தரவிட்டது.

இந்நிலையில், தற்போது ADSP வெள்ளத்துரையின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தமிழ்நாடு உள்துறை செயலாளர் அதிரடி உத்தரவு  பிறப்பித்துள்ளார்.

மேலும், ADSP வெள்ளத்துரை நாளையுடன் ஓய்வு பெற தமிழ்நாடு அரசு நிபந்தனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இத்துடன், 2 வழக்குகளில் மொத்தம் ரூ. 5 லட்சம் பிடித்தம் செய்யப்படும் எனவும் தமிழ்நாடு உள்துறை அறிவித்துள்ளது. இத்தொகையானது, ஓய்வுக்கு பின்னர் அரசு வழங்கும் தொகைகளில் இருந்து பிடித்தம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Published at: 31 May 2024 08:46 PM (IST)
Tags: Suspension breaking news Abp nadu ADSP Vellathurai
  • முகப்பு
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • ADSP வெள்ளத்துரை சஸ்பெண்ட் ரத்து - உள்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.