• ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தனி சைரன் - மணிப்பூர் ஆளுநர் அதிரடி நடவடிக்கை.. ஏன்?


மணிப்பூரில் இயக்கப்படும் ஆம்புலன்ஸ் இனி தனித்துவமான சைரன்கள் கொண்டு இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் கடந்த மே மாதம் குக்கி மற்றும் மெய்தி இன மக்களிடையே கடுமையான கலவரம் தொடங்கியது. இரு பிரிவினர்களும் கடும் தாக்குதலில் ஈடுபட்டதோடு, பொருட்களை சூறையாடுதல், வீடுகளை தீயிட்டு கொளுத்துதல், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகின. மேலும் படிக்க..



  •  வேற லெவல்! பெண்கள் பாதுகாப்பில் தாயகமாக விளங்கும் நம்ம சென்னை! வட மாநிலங்களின் கதி?


இந்தியாவில் பல நகரங்களில் குற்றங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தினந்தோறும் நடைபெற்று வருகின்றன. பெரிய நகரங்களில் குற்றங்களை கட்டுப்படுத்துவது அரசுக்கும், காவல்துறைக்கும் மிகப்பெரிய சவாலாகவே உள்ளது. இந்தியாவின் பெரு நகரங்களை பொறுத்தவரை நமது சென்னை எப்போதுமே பாதுகாப்பாக திகழும். வட மாநிலங்ளைச் சேர்ந்த மக்கள், அண்டை மாநிலங்களைச் சேர்ந்த பலர் சென்னையில் வசித்து வருகின்றனர். அவர்கள் எல்லாம், மற்ற நகரங்களை விட சென்னை தங்களைச் பாதுகாப்பாக உணரச் செய்வதாக கூறுகின்றனர்.  இது பல ஆய்விலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும் படிக்க..



  • சனாதன பிரச்சினைக்குப் பிறகு முதல் முறையாக பிரதமரைச் சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடியை, வியாழக்கிழமை மாலை டெல்லியில் சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் பெறுகிறது.  சில மாதங்களுக்கு முன், அமைச்சர் உதயநிதி பேசிய சனாதனம் தொடர்பான கருத்தினால் நாடு முழுவதும் பாஜக உள்ளிட்ட சில அமைப்புகளால் பெரும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. பிரதமருடன் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணம் மற்றும் மீள்பணிகளுக்காக, மாநில அரசு கேட்டிருந்த நிதியை உடனடியாக வழங்க ஆவனச் செய்யும்படி பிரதமரிடம் கேட்டுக் கொண்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க..



  • மன்மோகன் சிங் டூ ஜெயா பச்சன்: 2024இல் ஓய்வு பெறும் 68 மாநிலங்களவை உறுப்பினர்கள்


நாடாளுமன்றத்தை பொறுத்தவரையில், இரண்டு அவைகள் இருக்கின்றன. ஒன்று மக்களவை. இதற்கு ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். மக்களவை உறுப்பினர்களை தேர்தல் மூலம் மக்கள் நேரடியாக தேர்வு செய்கின்றனர். இவர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். இரண்டாவது மாநிலங்களவை. இதற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மூலம் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். 250 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில், 12 பேர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். மேலும் படிக்க..



  • மோடிக்கு சாதனை... மக்களுக்கு வேதனை! 10 ஆண்டுகளாக செய்தியாளர்களை சந்திக்காத இந்திய பிரதமர்!


ஊழல், தேசிய பாதுகாப்பு, பொருளாதார நிலை உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து பாஜக ஆட்சி அமைத்தது. மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து வரும் மே மாதத்துடன் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது. இந்த 10 ஆண்டுகளில் இந்திய பிரதமர் மோடி, ஒரு செய்தியாளர் சந்திப்பு கூட நடத்தாமல் இருந்திருப்பது பல்வேறு விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது. மேலும் படிக்க..