7 AM Headlines: உங்களையும், இந்த உலகத்தையும் சுற்றி என்ன நடந்தது.. இதோ! காலை 7 மணி தலைப்பு செய்திகள்..!

7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

Continues below advertisement

தமிழ்நாடு:

  • கேலோ இந்தியா போட்டி நிறைவு விழாவிற்கு பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.
  • தமிழக அரசியல்வாதிகள் நேசிப்பதை விட, பிரதமர் மோடி தமிழர்களையும், தமிழ் பாரம்பரியத்தையும் அதிகளவில் நேசிக்கிறார் - அண்ணாமலை
  • தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
  • ஜல்லிக்கட்டியில் காளைகளை அவிழ்க்கும்போது உரிமையாளரின் ஜாதிப்பெயரை அறிவிக்க கூடாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
  • 2 மனு கொடுத்தும் மத்திய அரசு வெள்ள நிவாரணம் தராததால் அமித்ஷாவை தமிழ்நாடு எம்பிக்கள் சந்திக்க முடிவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • அமலாக்கத்துறை ஆவணங்களை சரிபார்க்க அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு நீதிமன்றம் அனுமதி
  • கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜ் சகோதரரிடம் மான நஷ்டஈடு கோரிய வழக்கில் ஈபிஎஸ்சிடம் சாட்சியம் பதிவு - விரைவில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் 
  • அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக 2,000 ரூபாய் வழங்க வேண்டும் - வானதி சீனிவாசன் கோரிக்கை

இந்தியா: 

  • மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா
  • தேர்தல் பிரசாரத்தை முடக்குவதற்காக என்னை கைது செய்ய சதி; அமலாக்கத்துறை மீது டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பாய்ச்சல்
  • லட்சத்தீவு மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
  • 10 லட்சத்திற்கு அதிகமான  மக்கள் தொகை கொண்ட மாநகரங்களின் பட்டியலில், பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரமாக சென்னை முதலிடம் பிடித்துள்ளது.
  • சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அரவணை பாயாசத்திற்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
  • தேர்தல் நிதியாக 2022-23 காலகட்டத்தில் பாஜக மட்டும் 250 கோடி ரூபாயை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • பயணிகளிடம் வசூலிக்கப்படும் எரிபொருளுக்கான கட்டணத்தை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்ய உள்ள நிலையில், விமான டிக்கெட் கட்டணம் குறைய உள்ளது.
  • வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து ஜனவரி 14ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை தொடங்குகிறது.

உலகம்: 

  • அமெரிக்க உயர்நிலை பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு - 5 பேர் காயம்.
  • பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியின் சின்னமான கிரிக்கெட் பேட் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
  • வடகொரியா வழங்கிய ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குத நடத்தியது ரஷ்யா - அமெரிக்கை வெள்ளை மாளிகை தகவல்.
  • பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக பிலாவல் பூட்டோ அறிவிப்பு.
  • ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு.

விளையாட்டு: 

  • தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இ
  • ந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதும் டி20 கிரிக்கெட் தொடர் - மும்பையில் இன்று தொடங்குகிறது.
  • 38 அணிகள் பங்கேற்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. 
  • இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி  வீரர் ஐடன் மார்க்ரம் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார்.
Continues below advertisement
Sponsored Links by Taboola