• டிஸ்னியுடன் இணைந்த ரிலையன்ஸ்.. அம்பானி போட்ட மிகப்பெரிய கணக்கு சக்ஸஸ்!


முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் வால்ட் டிஸ்னியின் இந்திய ஊடக நிறுவனங்கள் இணைந்து செயல்பட முடிவு செய்து அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி வயாகாம் 18 மற்றும் ஸ்டார் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இனி இணைந்து செயல்படும். இந்த கூட்டணி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ரூ.11,500 கோடியை முதலீடு செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் அந்நிறுவனம் தனிப்பட்ட பங்குகளை பெற்றுள்ளது. ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி இணைவால் இந்த கூட்டு நிறுவனத்தின் மதிப்பு ரூ.70,352 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க..



  • ”ஆணவக் கொலையைத் தடுக்க திராவிட அரசு புதிய சட்டம் இயற்றனும்” - பாடல் பாடி நீலம் பண்பாட்டு மையம் கோரிக்கை


சாதிய ஆணவக் கொலைகள் என்பது தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் இந்தியாவிலும் நடைபெற்று வருகின்றது என்பது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும். ஆணவக்கொலைகளுக்கு ஆளான காதலர்கள் காதலித்து திருமணம் செய்தவர்கள் என இந்தியா முழுவதும் பலர் உள்ளனர். இதுதொடர்பான ஆவணங்களை புரட்டிப்பார்த்தால் இந்தியா முழுவதும் ஆங்காங்கே விழிப்புணர்வு இல்லாத மக்கள் இவ்வாறன குற்றத்தில் ஈடுபடுகின்றனர் என்ற மேம்போக்கான முடிவுக்கு நாம் வரக்கூடும். ஆனால் இதுதொடர்பாக பதிவு செய்யப்படாத ஆணவக் கொலைகள், அல்லது கொலையாக பதிவு செய்யப்பட்ட ஆணவக் கொலைகளின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள நீண்ட நெடிய ஆய்வே நடத்தவேண்டி உள்ளது. ஆணவக் கொலைகள் தொடர்பாக இதற்கு முன்னர் நடத்தப்பட்ட ஆய்வுகள் இதைத்தான் கூறுகின்றன.  மேலும் படிக்க..



  • நாளை பிளஸ் 2 பொது தேர்வு: ஆயத்தமாகும் மாணவர்கள்.. 3,302 மையங்களில் ஏற்பாடுகள் தீவிரம்..


பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், 3,302 தேர்வு மையங்களில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அடுத்தடுத்து நடைபெற உள்ளது. நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர தனி தேர்வார்கள் எத்தனை பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர் என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. மேலும் படிக்க..



  • "தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டுப் பொய்களால் மறைக்க முயற்சிக்கலாமா?"- பிரதமருக்கு திமுகவின் அடுக்கடுக்கான கேள்விகள்!


2 நாள் பயணமாக தமிழ்நாட்டுக்கு வருகைதந்த பிரதமர் மோடி, திமுக குறித்து பல்வேறு விமர்சனங்களை வைத்தார். இந்நிலையில், பிரதமர் மோடி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தும், அடுக்கடுக்கான பல கேள்விகளையும், திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கேள்வி  எழுப்பியுள்ளார். அரசுமுறைப் பயணமாகத் தமிழ்நாட்டுக்கு வந்து, அரசியல் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு, தாம் பிரதமர் என்பதையே மறந்து, அரசியல் அவதூறுகளை அள்ளி இறைத்துவிட்டுப் போயிருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள். அவரது உரையைப் பார்த்தபோது, அவரை நினைத்துப் பரிதாபமாக இருந்தது. மேலும் படிக்க..