பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், 3,302 தேர்வு மையங்களில் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Continues below advertisement

தமிழ்நாட்டில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அடுத்தடுத்து நடைபெற உள்ளது. நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர தனி தேர்வார்கள் எத்தனை பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர் என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.

தமிழ்நாட்டில் 3,300 க்கும் மேற்பட்ட மையங்களில் மாணவர்கள் தேர்வெழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. வினாத்தாள் மற்றும் விடைத்தாள் பாதுகாப்பாக கொண்டு வர ஏறபாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தேர்வு அறைகளில் மாணவர்கள் காப்பி அடித்தல், விடைத்தாள் மாற்றுவது போன்ற முறைகேடுகளில் மாணவர்கள் ஈடுபட்டால் அவர்களை பிடிக்க 3,200 பறக்கும் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் தேர்வறைக்குள் மாணவர்கள் செல்போன், மின்சாதானங்கள் உள்ளிட்டவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

பொதுத் தேர்வு நாளை தொடங்க உள்ள நிலையில், பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் ஹால் டிக்கெட்டுகள் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று பிற்பகல் முதல் www.dge.in.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்காக, "online portal" என்ற வாசகத்தினை 'click' செய்து "HIGHER SECONDARAY FIRST YEAR/ SECOND YEAR EXAM MARCH – 2024" என காணப்படும் பக்கத்தில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள user id, password பயன்படுத்தி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்”  என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மார்ச் 1 ஆம் தேதி தமிழ் மொழி பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் 5 ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத் தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து மார்ச் 8 ஆம் தேதி பல்வேறு வகையான பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. மார்ச் 11 ஆம் தேதி, வேதியல், கணக்கு உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகிறது. மார்ச் 15 ஆம் தேதி, கணினி, இயற்பியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்விகள் நடைபெறுகிறது.

கணிதம், விலங்கியல், வர்த்தகம், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உள்ளிட்ட பாடத்தின் பொதுத் தேர்வுகள் மார்ச் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளன. தொடர்ந்து உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 22ஆம் தேதி நடைபெற உள்ளன.