தமிழ்நாடு:



  • அனைத்து அரசு பள்ளிகளில் மார்ச் 1ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தல்

  • சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதும் நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் திட்டவட்டம்

  • பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும், நிலையான ஆட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி வழங்கும் - பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

  • தமிழ்நாட்டை வஞ்சித்துவிட்டு பொய்களால் மறைக்க முயற்சி - மோடிக்கு திமுக கண்டனம்.

  • குற்றங்கள் நடக்கும் முன்பே தடுக்க காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

  • முன்னாள் எம்.எல்.ஏ சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் ரூ.15 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல்.

  • தமிழ்நாட்டில் மோடி யாரை புகழ்ந்தாலும் பாஜகவுக்கு ஓட்டு கிடையாது - அமைச்சர் ரகுபதி.

  • மூத்த பத்திரிக்கையாளர் வி.என்.சாமிக்கு 2022ம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது.

  • சாந்தன் இறப்புக்கு முழுக்க முழுக்க மத்திய அரசே காரணம் - வேல்முருகன் குற்றச்சாட்டு.

  • தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் - அமைச்சர் சுப்பிரமணியன் அறிவிப்பு.

  • மக்களவை தேர்தலில் ஆரணி தொகுதியில் போட்டியிடுவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவிப்பு


இந்தியா: 



  • ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

  • ஜார்க்கண்ட்: ஜம்தாராவில் ரயில் மோதிய விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.

  • ஒய்.எஸ்.ஆர்.காங். எம்.பி ஸ்ரீனிவாசலு பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இருந்தும் விலகினார்.

  • புற்றுநோய் மீண்டும் வராமல் தடுக்கும் மருந்தை கண்டிபிடித்துள்ளதாக டாடா அறிவிப்பு.

  • மணிப்பூர் வன்முறையில் இதுவரை 219 பேர் உயிரிழந்திருப்பதாக ஆளுநர் உரையில் தகவல்.

  • சட்டவிரோத சுரங்க வழக்கு: சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு சிபிஐ சம்மன்.

  • 2022-23ல் மொத்த கட்சிகளின் வருவாய் ரூ.3077 கோடியில் பாஜக வருவாய் மட்டும் ரூ.2361 கோடி என தகவல்.

  • மக்களவை தேர்தலில் கேரளாவில் 16 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிப்பு.

  • நெல்லை அல்வாபோல் இங்குள்ள மக்களும் இனிமையானவர்கள் - பிரதமர் மோடி.

  • சண்டிகர் மாநகராட்சி மேயராக ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமார் பதவியேற்றார்.


உலகம்: 



  • பாலஸ்தீனத்தில் தேசிய ஒற்றுமை அரசு அமைப்பது தொடர்பாக இன்று ரஷ்யா பேச்சுவார்த்தை.

  • பாகிஸ்தானில் பிரதமர் பதவிக்கு ஷாபாஸ் ஷெரீபை பரிந்துரை செய்தார் நவாஸ் ஷெரீப்.

  • தமிழர்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் 2 சவால்கள் உள்ளது - ரணில் விக்கிரமசிங்கே.

  • பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவா மாகாண பேரவைக்கு தேர்வான உறுப்பினர்கள் பதவியேற்றனர்.

  • அமெரிக்க ராணுவத்தில் 5 சதவீதம் ஆட்களை குறைக்க அந்நாட்டு அரசு முடிவு.

  • பசிபிக் கடலில் உள்ள மெக்வாரி தீவுப்பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.4 ஆக பதிவு.

  • இஸ்ரேலில் யாரவுன் பகுதியில் ராக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல்.

  • ஹவுதி கிளர்ச்சி படை தளபதி இப்ராஹிம் நஷிரி மீது அமெரிக்கா, பிரிட்டன் பொருளாதார தடை விதிப்பு


விளையாட்டு: 



  • இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரஜத் பட்டிதரை பிசிசிஐ விடுவிக்க உள்ளதாக தகவல்

  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 2023-24-க்கான ஊதிய ஒப்பந்த பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை பிசிசிஐ நீக்கியுள்ளது.

  • இங்கிலாந்துக்கு எதிரான முழு டெஸ்ட் தொடரில் இருந்து, விராட் கோலி விலகிய நிலையில் வருகின்ற மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல்லில் இருந்தும் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.