• கரும்பு கொள்முதல் விலை ரூ.340 ஆக அதிகரிப்பு - மத்திய அரசு


கரும்புக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 340 ரூபாய் ஆக உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் கோரி விவசாயிகள் ஹரியானா எல்லையில் போராடி வருகின்றனர். இந்த நிலையில்,  கரும்புக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.340 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நரேந்திர மோடி அரசு உறுதி பூண்டுள்ளது. மேலும் படிக்க



  • இன்று சென்னை வருகிறார் தலைமை தேர்தல் ஆணையர்


நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்ய, தலைமை தேர்தல் ஆணையர் இன்று சென்னை வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்ய இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை காலை அனைத்துக் கட்சி தலைவர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்த உள்ளார். இதையடுத்து, தமிழ்நாடு தலைமைச் செயலாளர்,டிஜிபியுடன் நாளை மறுநாள் பிற்பகலில் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். மேலும் படிக்க



  • தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை வெளியீடு! சிறப்பம்சங்கள் என்னென்ன?


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் மகளிர் நலனை மேம்படுத்திடும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் தயாரிக்கப்பட்ட “தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024”-யை
வெளியிட்டார். சமூக நீதி, சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றின் அடிப்படையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • உ.பியில் காங்கிரஸ்க்கு 17 சீட்டுகளை ஒதுக்கிய சமாஜ்வாதி  


2024ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் I.N.D.I.A கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு முடிவடைந்துள்ளது. அதில், சாமாஜ்வாதி கட்சி காங்கிரஸ்க்கு உத்தர பிரதேசத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் 17 இடங்களை காங்கிரஸ்க்கு ஒதுக்கியுள்ளது. சமாஜ்வாதி கட்சி 62 இடங்களில் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளது.மேலும் படிக்க



  • தீவிர பயிற்சியில் ரிஷப் பண்ட்... ரசிகர்கள் உற்சாகம்! வைரல் வீடியோ! 


கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சாலை விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட், அந்த விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஓராண்டாக சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி எந்த ஒரு போட்டிகளிலும் பங்கேற்று விளையாடாமல் சிகிச்சை பெற்றார். மேலும் படிக்க