• சபரிமலை ஐயப்பன் கோவிலில் 39 நாட்களில் கிடைத்த வருமானம் இத்தனை கோடிகளா? 


சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சமீப நாட்களாக பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. கடந்த சில வாரங்களாக நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் முதல் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக தகவல் வெளியானது.  சபரிமலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1,00,969 பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தகவல் வெளியானது.இந்நிலையில் சபரி மலையில் 39 நாட்களில் 31 லட்சத்து 43 ஆயிரத்து 163 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க



  • மீண்டும் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி! என்ன ஆனது? தேமுதிக அதிரடி அறிக்கை..!


கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், கடந்த 12ம் தேதி உடல் நலம் பெற்று வீடு திரும்பினார். அதனை தொடர்ந்து அவரது தலைமையில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.  இந்நிலையில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • எண்ணூரில் நள்ளிரவில் 3 மணி நேரம் திக் திக்! திடீரென கிளம்பிய வாயு கசிவால் 30 பேர் மருத்துவமனையில் அனுமதி!


சென்னையை அடுத்த எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் நள்ளிரவில் வாயு கசிவு ஏற்பட்டதால் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு மூச்சு திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது.சென்னை எண்ணூரில் உள்ள கொரமண்டல் உரத் தொழிற்சாலையில் நேற்று இரவு 12 மணி அளவில் அம்மோனிய கசிவால் தொழிற்ச்சாலை  அருகில் உள்ள மீனவர்கள் வசிக்கும்  பெரிய குப்பம், சின்ன குப்பம், எர்ணாவூர் குப்பம், அன்னை சிவகாமி நகர் உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். மேலும் படிக்க



  • மக்களவைத் தேர்தலில் வெல்லப்போவது  யார்?  ABP நியூஸ் - சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள்


 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தல் தொடர்பாக ஏபிபி செய்தி நிறுவனமும் சி வோட்டரும் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள்  வெளியாகியுள்ளது. இதில்  மக்களவையில் உள்ள 543 தொகுதிகளில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 295 முதல் 335 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று தெரியவந்துள்ளது.இந்தியா கூட்டணி 165 முதல் 205 இடங்கள் வரை வெல்வதற்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிகிறது.மேலும் படிக்க



  • சொந்த மண்ணில் இன்று கடைசி ஆட்டம்; வெற்றிப்பாதைக்கு திரும்ப குஜராத்தை எதிர்கொள்ளும் தமிழ் தலைவாஸ்


ப்ரோ கபடி லீக் 2023 இன் 44வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி குஜராத் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோத உள்ளது. சென்னையில் உள்ள  நேரு உள்விளையாட்டு அரங்கில் உள்ள SDAT மைதானத்தில் இன்று அதாவது டிசம்பர் 27 புதன்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கு முன்னதாக இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் தபங் டெல்லி அணிகள் மோதவுள்ளது. மேலும் படிக்க