மும்பையைச் சேர்ந்த ஹனீஸ் (Hanees) என்பவர் Zomato-வில் 2023-ம் ஆண்ட்டில் 3,580 ஆர்டர்கள் செய்துள்ளார். இவரை நாட்டின் ஆகச்சிறந்த உணவுப் பிரியர் (Most Prolific fFoodie) என்று குறிப்பிட்டுள்ளனர்.


ஜோமோட்டோ:


2023 -ம் ஆண்டு முடியப் போகிறது. Zomato நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் அதிகம் ஆர்டர் செய்தவை, வாடிக்கையாளர்களின் விருப்பங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.  நாட்டின் டிஜிட்டல் சேவை துறையில் மிக முக்கியமானது ஆன்லைன் உணவு டெலிவரி. இருந்த இடத்திலிருந்தே உணவு ஆர்டர் செய்யும் பழக்கம் பெருகிவிட்டது என சொல்லலாம். இந்நிறுவனங்கள் அறிமுகமான காலக்கட்டத்தில் 50 சதவீத தள்ளுபடி, 90 சதவீத தள்ளுபடி, குறித்த நேரத்திற்கு உணவு வரவில்லை என்றால் இலவசமாக உணவுகளை கொடுத்துவிட்டு செல்வது என புதிய யுக்திகளை பயன்படுத்தியது.


அப்படியிருக்கையில், சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சாப்பாட்டை ஆன்லைன் ஆர்டர் செய்ய பலரும் தேர்வு செய்கின்றனர். Zomato நிறுவனம் தனது 2023 -ம் ஆண்டு உணவு ஆர்டர், டெலிவரி, எது அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது.


உணவு பிரியர்


மும்பையைச் சேர்ந்த ஹனீஸ் என்பவர் 2023- ஆண்டு முழுவதும் 3,580 உணவு ஆர்டர்களை செய்துள்ளார். ஒரு நாளைக்கு 9 முறை ஆர்டர் செய்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர் ஒரு நாளில் அதிகபட்சமாக ரூ.46,273-க்கு உணவு ஆர்டர் செய்துள்ளார். ஒரு நாளில் அதிகபட்சமாக ஆர்டர் செய்த நபர் என்பதை மும்பையைச் சேர்ந்தவர். ஒரு நாளில் 121 ஆர்டர் மேற்கொண்டுள்ளார். ஒருவர் 6.61 ரூபாய் மதிப்பிற்கு 1,389 ஆர்டர்களை கிஃப்ட் வவுச்சர் மூலம் ஆர்டர் செய்துள்ளர். நல்ல உள்ளத்துடன் மற்றவர்களுக்கு பரிசளித்துள்ளார் என்று Zomato குறிப்பிட்டுள்ளது.


Zomato -வில் அதிக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள்


 பிரியாணி


பிரியாணி என்பது ஒரு ஃபீலிங் என்று சொல்வதுண்டு. அதன்படி, 2023-ம் ஆண்டு 10 கோடியே 09 லட்சத்து 80 ஆயிரத்து 615 பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. Zomato-வில் ஆர்டர் செய்யப்பட்ட பிரியாணிகளை கொண்டு 8 Qutub Minars- ஐ நிறைத்துவிடுமாம்.


பீட்ஸா


ப்ரியாணிக்கு அடுத்ததாக அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு பீட்ஸா. 7,45,30,036  பீட்ஸா ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இது 3 ஈடன் கார்டன் கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தின் அளவுடையாதாகும். 


நூடுல்ஸ் பவுல்


4,55,55,490 நூடுல்ஸ் பவுல் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. 


சரி. நீங்க இந்தாண்டு மட்டும் எத்தனை முறை உனவு ஆர்டர் செய்தீங்கன்னு பாருங்க.