சென்னையை அடுத்த எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் நள்ளிரவில் வாயு கசிவு ஏற்பட்டதால் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு மூச்சு திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 30க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். 


என்ன ஆச்சு எண்ணூரில்..? 


சென்னை எண்ணூரில் உள்ள கொரமண்டல் உரத் தொழிற்சாலையில் நேற்று இரவு 12 மணி அளவில் அம்மோனிய கசிவால் தொழிற்ச்சாலை  அருகில் உள்ள மீனவர்கள் வசிக்கும்  பெரிய குப்பம், சின்ன குப்பம், எர்ணாவூர் குப்பம், அன்னை சிவகாமி நகர் உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். மேலும், பொதுமக்கள் ஒரு சிலர் இந்த வாயு கசிவிற்கு பயந்து நடந்தே சென்று உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். ஒரு சிலர் திருமண மண்டபங்கள் சாலைகளில் ஓரம் குடும்பத்துடன் தஞ்சமடைந்தனர்.


இதில், சுமார் 30க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் மூச்சுத் திணறால் பாதிக்கப்பட்டவர்களை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொழிற்சாலை நிர்வாகம் அமோனியா கசிவை சரி செய்து விட்டதாகவும், இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று அறிவுறுத்திய நிலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


 ஊர் மக்களை அப்புறப்படுத்திய சமூக ஆர்வலர்கள் - காவல் துறையினர்:


கண் எரிச்சல் காரணமாக  பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டு வீட்டில் இருந்த குடும்பத்துடன் வெளியேறிய பகுதி வாழ் மக்கள் கண் எரிச்சல் மூச்சுத்திணறல் தலைவலி மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்ட நிலையில் பயத்தில் கூட்டம் கூட்டமாக  நடந்தே சென்று வெளியேறினர். 


இதையடுத்து, சம்பவ இடத்திற்கு எண்ணூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் வந்து தொழிற்சாலை நிர்வாகிகளிடம் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், எண்ணூர் திருவொற்றியூர் மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வடக்கு வட்டார துணை ஆணையர் ரவி தேஜோகட்டா,  மற்றும் இணை ஆணையர் விஜயக்குமார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


பாதிப்பு குறித்து இன்று தெரியவரும் என்றும் தொழிற்சாலையில் இருந்து கடல் வழியாக வெளியே செல்லும் குழாய் உடைந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாகவும், சுமார் மூன்று மணி நேரம் அனைவருக்கும் கண் எரிச்சல் ஏற்பட்டதாககவும் இது படிபடியாக குறைந்து விடும் என்று தெரிவித்தனர். 


நல்ல பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட தனியார் அரசு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் இரண்டு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கசிவானது சுமார் ஒரு மணி நேரத்தில் சரி செய்யப்பட்டதாக காவல்துறை சார்பாக கூறப்படுகிறது