• செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடு முடிந்தவரை, வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.


GPAI என்பது 28 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அடங்கிய ஒரு அமைப்பாகும்.  இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் புரிந்துகொள்வதற்கும், அதன் பொறுப்பான பரிணாமத்தை மேம்படுத்துவதற்கும் ஒன்றாகச் செயல்படுகிறது. 2024 ஆம் ஆண்டிற்கான GPAI இன் தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் தான், செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கூட்டாண்மை (GPAI) உச்சிமாநாட்டை, பிரதமர் மோடி டெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் படிக்க: AI தொழில்நுட்ப பிரச்னைகள் - ஒரு நொடியை கூட வீணாக்காமல் செயல்பட பிரதமர் மோடி வலியுறுத்தல்




  • முதலமைச்சரான புதுமுகங்கள்! மூத்த தலைவர்களை கழட்டிவிட்ட பா.ஜ.க.! அதிருப்தியில் ஆதரவாளர்கள்!




நாடு முழுவதும் அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தாண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சத்தீஸ்கர், தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்ற தேரதல் நடைபெற்றது. இதில், தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற மிசோரத்தில் சோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியது. மேலும் படிக்க: முதலமைச்சரான புதுமுகங்கள்! மூத்த தலைவர்களை கழட்டிவிட்ட பா.ஜ.க.! அதிருப்தியில் ஆதரவாளர்கள்!




  • டெல்லி: கடந்தாண்டில் மட்டும் சாலை விபத்தில் இத்தனை பேர் உயிரிழப்பா? புள்ளி விவரம் சொல்வது இதுதான்!




டெல்லி போக்குவரத்து காவல்துறையினர் பட்டியல் ஒன்றை வெளியிட்டனர். இதில், டெல்லியில் நடைபெற்ற விபத்து குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளனர்.  2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 1461 பேர் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரத்து 201 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும் படிக்க: டெல்லி: கடந்தாண்டில் மட்டும் சாலை விபத்தில் இத்தனை பேர் உயிரிழப்பா? புள்ளி விவரம் சொல்வது இதுதான்!




  • ”அமித்ஷாவிற்கு தெரிந்தது எல்லாம் இதுதான்” - நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு




நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “ சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் மக்கள் பணம் யார் பெறுகிறார்கள்? ஆகியவை தான் அடிப்படைப் பிரச்சினை.  அவர்கள் இந்த பிரச்சினையை விவாதிக்க விரும்பவில்லை. இதிலிருந்து தப்பி ஓடுகிறார்கள்.மேலும் படிக்க: ”அமித்ஷாவிற்கு தெரிந்தது எல்லாம் இதுதான்” - நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல்காந்தி குற்றச்சாட்டு




  • ராஜஸ்தானில் இருந்த இழுபறிக்கு முடிவு...புதிய முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு..!




ராஜஸ்தானின் முதலமைச்சராக வேண்டும் என வசுந்தரா ராஜே பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வரை பேசிய நிலையில் , எதிர்பாராத திருப்பமாக பஜன்லால் சர்மா முதலமைச்சராக தேர்வாகியுள்ளார். மேலும் படிக்க: ராஜஸ்தானில் இருந்த இழுபறிக்கு முடிவு...புதிய முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வு..!