நாட்டின் தலைநகரான டெல்லி எப்போதும் பரபரப்பாக காணப்படும் நகர் ஆகும். காற்று மாசுபாட்டிற்கு பிறகு டெல்லியில் போக்குவரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தாலும் டெல்லி போக்குவரத்து பரபரப்பாகவே காணப்படும்.


டெல்லி சாலை விபத்து:


இந்த நிலையில், டெல்லி போக்குவரத்து காவல்துறையினர் பட்டியல் ஒன்றை வெளியிட்டனர். இதில், டெல்லியில் நடைபெற்ற விபத்து குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளனர். இதில் 2021 மற்றும் 2022ம் ஆண்டுகளில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 1461 பேர் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரத்து 201 பேர் காயம் அடைந்துள்ளனர். 2021ம் ஆண்டு நடந்த விபத்தில் 1239 பேர் உயிரிழந்துள்ளனர். 4 ஆயிரத்து 273 பேர் காயம் அடைந்துள்ளனர்.


டெல்லியில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 43 சதவீதம் பேர் ஆவார்கள். விபத்தில் சிக்கியவர்களில் 38 சதவீதம் பேர் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் ஆவார்கள். இந்த சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 81 சதவீதம் பேர் பாதசாரிகளும், இரு சக்கர வானகத்தில் சென்றவர்களும் ஆவார்கள். காயம் அடைந்தவர்களில் 78 சதவீதம் பேர் பாதசாரிகளும், இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களும் ஆவார்கள்.


பாதசாரிகள், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அதிக பாதிப்பு:


கடந்த 2021ம் ஆண்டு 504 பாதசாரிகள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். 1536 பாதசாரிகள் காயம் அடைந்துள்ளனர். ஆனால், 2022ம் ஆண்டு இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2022ம் ஆண்டில் மட்டும் டெல்லியில் நடந்த சாலை விபத்தில் 629 பாதசாரிகள் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்தோர் எண்ணிக்கையும் 1777 பேர் காயம் அடைந்துள்ளனர்.


மேலும், தலைநகரில் நடைபெறும் சாலை விபத்துகளினால் ஏற்படும் 3 மரணங்களில் ஒன்று இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு ஏற்படுகிறது. இந்த சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களில் அதிகளவு ஆண்களே உயிரிழக்கின்றனர். 2022ம் ஆண்டு சாலை விபத்தில் உயிரிழந்தவர்களில் 92 சதவீதம் பேர் ஆண்கள் ஆவார்கள். காயம் அடைந்தவர்களில் 86 சதவீதம் ஆண்கள் ஆவார்கள். விபத்தில் காயம் அடைந்தவர்களில் 74 சதவீதம் ஆண்கள் ஆவார்கள். 26 சதவீதம் பெண்கள் ஆவார்கள்.


டெல்லியில் கடந்த 2022ம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் அதிகளவு உயிரிழப்பு விபத்து ரிங்ரோட்டில் நடந்துள்ளது. அங்கு நடந்த விபத்தில் சிக்கியவர்கள் 119 பேர் உயிரிழந்துள்ளனர். ரிங் ரோடுக்கு வெளிப்புறத்தில் நடந்த விபத்துகளில் 102 பேர் உயிரிழந்துள்ளனர். ஜிடி கர்ணல் சாலையில் நடந்த விபத்தில் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.


டெல்லியில் நடந்த சாலைவிபத்துகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இத்தனை பேர் உயிரிழந்த சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விபத்தில் பாதசாரிகள் பலரும் உயிரிழந்த சம்பவமும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: Telangana Politics: ஆரம்பமே அதிரடி..! முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை சந்தித்த விவகாரம்: தெலங்கானா டிஜிபியின் சஸ்பெண்ட் ரத்து


மேலும் படிக்க: Shocking Video: அமேசானில் சோனி XB910N வயர்லெஸ் ஹெட்ஃபோனை ஆர்டர் செய்த நபர்.. கோல்கேட் பேஸ்ட் வந்ததால் அதிர்ச்சி!