• ராமலிங்கமா? ரங்கராஜனா? - வேட்பாளர் பெயரை மறந்து பரப்புரைக்கு வந்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்!


நாமக்கலில் வாகனப் பேரணியில் ஈடுபட்டு பாஜகவுக்கு வாக்கு சேகரித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்பாளர் பெயரை மாற்றி சொன்னதால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி ஒட்டுமொத்தமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் தேர்தல் திருவிழா இந்தியா முழுவதும் களைக்கட்டியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில் தேசிய, மாநில கட்சியினர் தீவிரமாகவும், விதவிதமாகவும் மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர்.  மேலும் படிக்க..



  • சென்னையில் இன்று பிரதமர் மோடியின் ரோட் ஷோ - பயண விவரமும் போக்குவரத்து மாற்றங்களும்!


 பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருவதை முன்னிட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக, தனது தலைமையிலான தனி கூட்டணியை உருவாக்கி களம் காண்கிறது. இந்நிலையில் தங்களது கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர்க்ள் பலரும் தமிழ்நாட்டில் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நடப்பாண்டில் 7வது முறையாக பிரதமர் மோடி இன்று இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். மேலும் படிக்க..



  • காங்கிரஸ் ஆட்சி அமைந்தால்.. ராகுல் காந்தி அளித்த வாக்குறுதிகள்..!


நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் நடத்தப்பட்டு ஜூன் 4 ஆம் தேதி முடிவுகள் வெளியாகிறது. இதற்காக இந்தியா முழுவதிலும் இருக்கும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகள் மேற்கொண்டு வருகிறது. தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் சயோனி மாவட்டத்தில் இருக்கும் தானோராவில் காங்கிரஸ் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்துக்கொண்டார். மேலும் படிக்க..



  • போதைப் பொருள் கடத்தல் வழக்கு: அமீர், ஜாஃபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை..


போதைபொருள் கடத்தல் விவகாரத்தில் கைதான ஜாஃபர் சாதிக் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் ரூ.75 கோடி மதிப்பு கொண்ட போதைப்பொருள் த்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும், டெல்லி போலீசாரும் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மேலும் படிக்க..



  • டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு.. எப்படி பார்க்கலாம்?


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC Group 2A தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடந்த முதல்நிலை தேர்வை 11 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து 9 லட்சம் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 161 நேர்காணல் பணியிடங்களும், 5990 நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கும் தேர்வு நடைபெற்றது. முதல் நிலை தேர்வில் 57 ஆயிரத்து 641 பேர் தேர்ச்சி அடைந்த நிலையில் இவர்களில் 55,071 பேர் முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தனர். மேலும் படிக்க..