சமீபகாலமாக இணையத்தில் india its not beginners என்ற வாசகத்துடன் பல வீடியோக்கள் உலா வருவதை பார்க்க முடியும். அதாவது, இந்தியா கற்றுக்குட்டிகளுக்கான இடம் அல்ல. அது அனுபவசாலிகளுக்கும், அசாதாரணமானவர்களுக்குமான இடம் என்பதே அதன் பொருள் ஆகும். அதற்கேற்ப பல வினோதமான செயல்களை இந்தியர்கள் செய்வது போன்ற வீடியோக்களும் வைரலாகி வருவதே இதற்கு காரணம்.


சிறுத்தையுடன் செல்ஃபி:


மயிலாடுதுறையில் ஒரு வாரத்திற்கு மேலாக ஊருக்குள் புகுந்த சிறுத்தையால் ஒட்டுமொத்த மாவட்டமே கதிகலங்கி நின்று கொண்டிருக்கிறது. ஆனால், வட இந்தியாவில் ஒரு இளைஞர் சிறுத்தையுடன் நின்று செல்ஃபி எடுத்துள்ளார். அதை மற்றொரு நபர் வீடியோவாக எடுத்துள்ளார்.






சாதுவாக அமர்ந்திருந்த சிறுத்தை:


தற்போது இணையத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக காட்டு விலங்குகளான சிங்கம், புலி, சிறுத்தை மிகவும் ஆபத்தான விலங்குகளாக மனிதர்களால் அறியப்படுகிறது. இவை தாக்கினால் மனிதர்களின் உயிருக்கே ஆபத்து ஆகும். இந்த சூழலில், விளை நிலம் ஒன்றில் புகுந்த சிறுத்தை ஒன்றுடன் அந்த இளைஞர் மிக மிக இயல்பாக நின்று செல்ஃபி எடுக்கிறார்.


அந்த சிறுத்தையும் அவர் வளர்த்த செல்ல நாய் போல அருகில் மிக சாதுவாக அமர்ந்துள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எப்போது? எங்கே எடுக்கப்பட்டது? என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த வீடியோவிற்கு கீழே பலரும் அந்த இளைஞரை பாராட்டியும், அவருக்கு எச்சரிக்கை விடுத்தும் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.


 மேலும் படிக்க: Household Tips: பாத்திரம் அடிபிடிக்குதா? துணிகளில் டீ, காபி கறையா? பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் இதோ..


மேலும் படிக்க:  House Hold Tips: பருப்பில் வண்டு வராமலிருக்க.. மல்லிகை பூ 1 வாரத்திற்கு ஃப்ரெஷ்ஷாக இருக்க - பயனுள்ள குறிப்புகள்!