PM Modi: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருவதை முன்னிட்டு, 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


7வது முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடி:


நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக, தனது தலைமையிலான தனி கூட்டணியை உருவாக்கி களம் காண்கிறது. இந்நிலையில் தங்களது கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தேசிய தலைவர்க்ள் பலரும் தமிழ்நாட்டில் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நடப்பாண்டில் 7வது முறையாக பிரதமர் மோடி இன்று இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இந்த பயணத்தின் போது சென்னை மற்றும் வேலூர் உள்ளிட்ட மக்களவை தொகுதிகளில் போட்டியிடும், பாஜக வேட்பாளர்களுக்காக ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார். 


மோடியின் 2 நாள் பயண விவரம்: 



  • கேரளாவில் இருந்து புறப்பட்டு இன்று மாலை சென்னை விமான நிலையம் வந்தடைகிறார் பிரதமர் மோடி

  • விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம், ஜி.என்.டி., சாலை வழியாக பனகல் பார்க் செல்கிறார்

  • அங்கு தொண்டர்களின் வரவேற்பை ஏற்கும் மோடி 6 மணியளவில் ரோட் ஷோவில் பங்கேற்று, பாஜக சார்பில் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன், வடசென்னையில் போட்டியிடும் பால்கனகராஜ் மற்றும் மத்திய சென்னையில் போட்டியிடும் வினோஜ் செல்வம் ஆகியோருகாக வாக்கு சேகரிக்க உள்ளார்.

  • ரோட் ஷோவுடன் இன்றைய பரப்புர முடிய,  இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒய்வெடுக்கிறார்

  • நாளை  காலை சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டரில் பயணம் செய்து வேலூர் சென்றடைகிறார்

  • கோட்டை மைதானத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு வேலூரில் பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்

  • அங்கிருந்து பிற்பகல் 1.45 மணியளவில் மேட்டுப்பாளையம் சென்றடைகிறார்.

  • அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளரான எல்.முருகனுக்கு வாக்கு சேகரிக்கிறார்.

  • இறுதியாக கோவை சூலூர் விமானப்படை விமான தளத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து மகாராஷ்டிராவிற்கு புறப்படுகிறார். அத்துடன் மோடியின் இரண்டு நாள் தமிழக பயணம் நிறைவடைகிறது.


போக்குவரத்து மாற்றங்கள்:


சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள் அறிவிப்பின்படி, பிரதமர் மோடியின் சாலை அணிவகுப்பு நடக்கும் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளான ஜிஎஸ்டி சாலை மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு, 100 அடி சாலை. அண்ணாசாலை, எஸ்.வி. படேல், காந்தி மண்டபம் சாலை மற்றும் தி.நகர் ஆகிய இடங்களில்  பிற்பகல் 03.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை  போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


பிற்பகல் 03.00 மணி முதல், தியாகராய சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாகவும்,  தியாகராய சாலை முழுவதும். வெங்கட நாராயன சாலை, ஜி.என்.செட்டி சாலை மற்றும் வடக்கு போக் சாலை ஆகியவை வாகன நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாலைகளில் வணிக வாகனங்கள் (Goods Vehicle) 02.00 மணி முதல் 09.00 மணி வரை இடைஇடையே தடை செய்யப்படும்.



  • பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து கத்திப்பாறை நோக்கி செல்லும் வாகனங்கள்.

  • மவுண்ட் பூத்தமல்லி சாலையில் இருந்து அண்ணாசாவை நோக்கி செல்லும்

  • CPET மில் இருந்து அண்ணமாலை நோக்கி செல்லும் வாகனங்கள்.

  • வடபழனியில் இருந்து தி. நகர் வள்ளுவர் கோட்டம் நோக்கி செல்லும் வாகனங்கள்.

  • கத்திப்பாராவில் இருத்து சைதாப்பேட்டைக்கு செல்லும் வாகனங்கள்

  • CPT -யில் இருந்து விமான நிலையம் மற்றும் காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள்.

  • டைடல் பார்க்கில் இருந்து காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகணங்கள்.

  • அண்ணா சாலையில் இருந்து மவுண்ட் ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள்


தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்:



  • சென்னையில் பிரதமர் மோடி செல்ல இருக்கும் அனைத்து பகுதிகளும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளன

  • ரோட்-ஷோ நடைபெற உள்ள பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபடுகின்றனர்

  • விடுதிகளில் தங்கியிருப்பவர்கள் மற்றும் அந்தந்த பகுதியில் உள்ள கடை ஊழியர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன

  • 144 தடை சட்டத்தின் கீழ் சென்னையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

  • தியாகராய நகர் மற்றும் ஆளுநர் மாளிகையில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

  • பிரதமரின் பாதுகாப்பு பணிகளுக்காக சென்னையில் 22 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்