தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC Group 2A தேர்வுகளுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது.


மாநில அரசின் பல்வேறு பதவிகளுக்கான பணியிடங்கள் குரூப் 1, 2, 3, 4 என பலவகையான தேர்வுகள் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையம் சார்பில் நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடந்த Group 2Aவின் முதல்நிலை தேர்வை 11 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து 9 லட்சம் விண்ணப்பத்தாரர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 161 நேர்காணல் பணியிடங்களும், 5990 நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கும் தேர்வு நடைபெற்றது. முதல் நிலை தேர்வில் 57 ஆயிரத்து 641 பேர் தேர்ச்சி அடைந்த நிலையில் இவர்களில் 55,071 பேர் முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்த தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. 






இதன் தேர்வு முடிவுகள் நடப்பாண்டின் ஜனவரி மாதம் வெளியானது. இதற்கிடையில் நேர்காணல் கொண்ட 161 பணியிடங்களுக்கு 483 தேர்வர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். இவர்கள் இரண்டு கட்டங்களாக அழைக்கப்பட்டு சிறப்புத் துறை உதவியாளர் 29 பணியிடங்கள் தவிர்த்து மற்ற பணியிடங்கள் நிரப்பப்பட்டது. அதேசமயம் நேர்முக தேர்வு அல்லாத பணியிடங்களுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் நீண்ட மாதங்களாக வெளியிடப்படாமல்  இருந்தது. இந்நிலையில் இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.இதன்மூலம் 5,990 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. முடிவுகளை https://www.tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம். மொத்தல் 5,990 காலியிடங்களில் 14, 517 தேர்வர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


GROUP 1 தேர்வுக்கான தரவரிசை பட்டியல்


இந்நிலையில் பல்வேறு துறைகளில் காலியான குரூப் 1 தேர்வு  எழுதியவர்களுக்கான தரவரிசைப் பட்டியலும் நேற்று வெளியானது. 93 பணியிடங்களுக்கான தேர்வை மொத்த 2, 113 பேர் எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க: Engineering Fees: பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு? வெளியான அதிர்ச்சித் தகவல்