- ஒருத்தருக்கு ஒரு ஓட்டுதான்..நேர்மையே தெரியாத திருட்டுத்தனம் : அண்ணாமலையை விமர்சித்த எஸ்.வி.சேகர்!
கோவையில் ஓட்டுரிமை இல்லை என பாஜக தொண்டர்கள் போராடிய சம்பவத்தில் மாநில தலைவர் அண்ணாமலையை சாடி எஸ்.வி.சேகர் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. ஒருமாத காலமாக நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி தொடங்கி முக்கிய தேசிய தலைவர்கள் தமிழ்நாட்டு வருகை தந்தனர். இப்படியான நிலையில் வாக்குப்பதிவு நாளன்று சில தொகுதிகள் பலருக்கும் வாக்குகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் படிக்க..
- அமேதியில் ராகுல், ரேபரேலியில் பிரியங்கா காந்தி போட்டி? - காங்கிரஸ் எடுத்த முடிவு என்ன?
அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும், ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தியும் போட்டியிட வேண்டும் என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில்,, ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வதேராவை அகியோர் முறையே, உத்தரபிரதேசத்தில் உள்ள அமேதி மற்றும் ரேபரேலி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் ஏராளமான நிர்வாகிகள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. உத்தரப்பிரதேசத்தின் மேலும் படிக்க..
- 3ம் கட்ட வாக்குப்பதிவு எப்போது? எந்தெந்த மாநிலங்களில், எத்தனை தொகுதிகளில் தெரியுமா?
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மூன்றாம்கட்டமாக, 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த 19ம் தேதி 102 தொகுதிகளிலும், 26ம் தேதி 88 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து வரும் மே மாதம் 7ம் தேதி மூன்றாம்கட்டமாக 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேலும் படிக்க..
- ஐடி நிறுவனங்களில் ஒரு வருடத்தில் 69 ஆயிரம் வேலையிழப்பு! அதிர்ச்சியளிக்கும் தகவல்
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), இன்ஃபோசிஸ், எச் சி எல் டெக், விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா உள்ளிட்ட டாப் ஐந்து இந்திய ஐடி சேவை நிறுவனங்களில் 2024 ஆம் நிதியாண்டில் சுமார் 69,167 வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஐந்து நிதியாண்டுகளில், ஐடி சேவை நிறுவனங்களின் பணியாளர் சேர்க்கை ஒட்டுமொத்தமாக குறைந்துள்ளது, இதுவே முதல் முறையாக பார்க்கப்படுகிறது. 24-ஆம் நிதியாண்டில், TCS இன் பணியாளர்கள் எண்ணிக்கையில் 13,249 பேரை குறைத்ததாகவும், மேலும் படிக்க..
- "அப்பாவ துண்டு துண்டா, வீட்டுக்கு கொண்டு வந்தேன்" பிரியங்கா காந்தி உருக்கம்!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. கடந்த 19ஆம் தேதி, முதற்கட்டமாக 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதையடுத்து, இரண்டாவது கட்டமாக நேற்று 88 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாடு, கேரளா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நிறைவு பெற்றுள்ள நிலையில், குஜராத்தில் வரும் மே மாதம் 7ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது. மேலும் படிக்க..