டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), இன்ஃபோசிஸ், எச் சி எல் டெக், விப்ரோ மற்றும் டெக் மஹிந்திரா உள்ளிட்ட டாப் ஐந்து இந்திய ஐடி சேவை நிறுவனங்களில் 2024 ஆம் நிதியாண்டில் சுமார் 69,167 வேலை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டாப் இந்திய ஐடி நிறுவனங்கள்:
கடந்த ஐந்து நிதியாண்டுகளில், ஐடி சேவை நிறுவனங்களின் பணியாளர் சேர்க்கை ஒட்டுமொத்தமாக குறைந்துள்ளது, இதுவே முதல் முறையாக பார்க்கப்படுகிறது. 24-ஆம் நிதியாண்டில், TCS இன் பணியாளர்கள் எண்ணிக்கையில் 13,249 பேரை குறைத்ததாகவும், இன்ஃபோசிஸின் பணியாளர்கள் எண்ணிக்கையில் 25,994 பேரை குறைத்ததாகவும், அதே நேரத்தில் விப்ரோ 24,516 ஊழியர்களை குறைத்ததாகவும் ,டெக் மஹிந்திரா அதன் பணியாளர்கள் எண்ணிக்கையில் 6,945 பேரை குறைத்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் , டாப் 5 இந்திய ஐடி நிறுவனங்களில் இருந்து சுமார் 69, 167 பேர் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
24-ஆம் நிதியாண்டில் வீழ்ச்சி :
"FY24 இல் வளர்ச்சி ஏற்படாததால், நிறுவனங்கள் குறைந்த பணியமர்த்தலுக்கு வழிவகுத்ததாகவும், வளர்ச்சி திரும்பியவுடன், பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கும் என தகவல் தெரிவிக்கின்றன.. மேலும், AI தாக்கம் அதிகரித்து வருவதால், நிறுவனங்களுக்கு பணியாளர்கள் தேவை குறைய வாய்ப்புள்ளது எனவும் தகவல் தெரிவிக்கின்றன.
Infosys மற்றும் Wipro ஆகியவை FY25க்கான புதிய பணியமர்த்தல் இலக்குகளை பகிர்ந்து கொள்ளவில்லை,
நிறுவனங்கள் வழக்கமாக புதியவர்களை சேர்ப்பதில், TCS சுமார் 40,000 புதியவர்களைச் சேர்க்கும், HCLTech 10,000 க்கும் மேற்பட்ட புதியவர்களைச் சேர்க்கும் எனவும் Tech Mahindra 6,000 புதியவர்களை வேலைக்கு அமர்த்தும் என கூறப்படுகிறது.
மாற்றத்தை நோக்கி ஐடி:
இந்நிலையில் ஐடி நிறுவன வல்லுநர்கள் தெரிவிக்கையில், புதியவர்களை ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் மாற்றங்களை கொண்டுவர ஐடி நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. குறிப்பாக கேம்பஸ் டிரைவ் முறையில் ஆட்சேர்ப்பு குறைய வாய்ப்புள்ளது எனவும் வரும் காலத்தில் தேவைக்கேற்ப ஐடி நிறுவனங்கள் ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.