Lok Sabha Elections 2024; நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மூன்றாம்கட்டமாக, 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு:


 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த 19ம் தேதி 102 தொகுதிகளிலும், 26ம் தேதி 88 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து வரும் மே மாதம் 7ம் தேதி மூன்றாம்கட்டமாக 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 7ம் தேத் காலை 7 மணிக்கு தொடங்க மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 


எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகள்?


அசாமில் 4 மக்களவை தொகுதிகள், பீகாரில் 5 மக்களவை தொகுதிகள், சத்தீஸ்கரில் 7 மக்களவை தொகுதிகள், தாத்ரா & நாகர் ஹாவேலி மற்றும் டாமன் & டையூவில் 2 மக்களவை தொகுதிகள், கோவாவில் 2 மக்களவை தொகுதிகள், குஜராத்தில் 26 மக்களவை தொகுதிகள், ஜம்மு & காஷ்மீரில் 1 மக்களவை தொகுதி, கர்நாடகாவில் 14 மக்களவை தொகுதிகள், மத்தியபிரதேசத்தில் 9 மக்களவை தொகுதிகள், மகாராஷ்ட்ராவில் 11 மக்களவை தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 10 மக்களவை தொகுதிகள் மற்றும் மேற்குவங்கத்தில் நான்கு என மொத்தம் 94 மக்களவை தொகுதிகளில் மூன்றாம்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


களத்தில் 1,352 வேட்பாளர்கள்:


95 தொகுதிகளில் போட்டிட்யிட 2,963 பேர் வேட்பமனுதாக்கல் செய்தனர். பரிசீலனைக்குப் பிறகு அவற்றில் 1,563 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தொடர்ந்து பலர் தங்களது வேட்பும்கனுக்களை திரும்பப் பெற்றதன் முடிவில், தற்போது ஆயிரத்து 352 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 26 தொகுதிகளில் 658 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதைதொடர்ந்து மகாராஷ்டிராவில் 519 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  ஒரு தொகுதியில் அதிகபட்சமாக மகாராஷ்ட்ராவின் ஒஸ்மானாபாத்தில் 77 வேட்பாளர்களும், சத்தீஸ்கரின் பிளாச்பூர் தொகுதியில் 68 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். வேட்பாளர் ஒருவர் உயிரிழந்தால் நிறுத்தப்பட, மத்தியபிரதேசத்தின் பேடுல் தொகுதியிலும் வரும் 7-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு 8 வேட்பாளர்கள் இடையே போட்டி நிலவுகிறது.


அனல் பறக்கும் பரப்புரை:


மூன்றாம் கட்ட வாக்குப்பதிவ முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே வார்த்தைப் போர் அரங்கேறி வருகிறது. இன்று கர்நாடகா பயணிக்கும் பிரதமர் மோடி 4 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளார். முன்னதாக, கர்நாடகவிற்கு அண்மையில் வெள்ளம் மற்றும் வறட்சி நிதி என மத்திய அரசு சுமார் 3000 கோடி ரூபாயை விடுவித்துள்ளது.  இதனிடையே, அங்கு மாநில காங்கிரசும் கடுமையாக களப்பணியாற்றி வருகிறது. அதோடு, மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக சாடி வருகிறது. தேர்தலுக்காக மட்டுமே நிதியை விடுவித்து உள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.