தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகிக்க ரூ. 150 கோடி நிதி ஒதுக்கீடு: அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
- புயல், வெள்ள நிவாரணத்துக்கு தமிழ்நாட்டிற்கு ரூ.267 கோடி ஒதுக்கியது மத்திய அரசு - எதிர்க்கட்சிகள் கண்டனம்
- புயலுக்கு கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை; மாநில அரசை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
- மிக்ஜாம் புயல், வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாக ரூ. 37,907 கோடியை தமிழ்நாடு கோரிய நிலையில், மத்திய அரசு விடுவித்திருப்பது நீதியில்லை - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
- நேற்று முதல் வருகின்ற மே 1 ஆம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
- அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் என்றும் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரித்து காணப்படும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
- சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ. 54,160-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
- பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானதாக கூறப்படும் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
- புதுச்சேரியில் அரசு பள்ளியில் கோடை விடுமுறை ஏப்ரல் 29ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து சுற்றறிக்கையை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா:
- மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்துக்கு 3 ஆண்டுகளாக ஒரு ரூபாய் கூட மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை - ஆர்டிஐ தகவல்
- தெலங்கானா மருந்து கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து; 50 பேரை மீட்ட சிறுவனை போலீசார், தீயணைப்புத்துறையினர் பாராட்டு
- உங்களிடம் இப்படி பொய் சொல்லும் நாட்டின் முதல் பிரதமர் இவர்தான் (மோடி) என்று பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
- பிரதமர் மோடியை போன்று தோற்றம் கொண்ட குஜராத்தைச் சேர்ந்த நபர், பானி பூரி விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மாட்டிறைச்சி உண்ண அனுமதி வழங்கிவிடும் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
- உத்தரபிரதேசத்தில் தேர்வு விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என எழுதிய மாணவரை தேர்ச்சி பெற செய்த, இரண்டு பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உலகம்:
- சீன உதவியில் கட்டப்பட்ட இலங்கை விமான நிலையம் - இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பு.
- உண்மையான சுதந்திரத்திற்காக எந்த தியாகத்தையும் தான் செய்ய தயார் - இம்ரான்கான்.
- உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது ரஷ்யா சர்மாரி ஏவுகனை வீச்சு என தகவல்.
- கம்போடியா ராணுவ தளத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.
- செங்கடலில் பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி தாக்குதல் - அமெரிக்கா தகவல்.
- அமெரிக்கா: 20 அடி உயரம் பறந்து மரத்தில் மோதிய கார் - 3 இந்திய பெண்கள் உயிரிழப்பு
விளையாட்டு:
- ஐபிஎல் 2024: குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மதியம் 3.30 மணிக்கு மோதுகின்றன.
- இன்று நடைபெறும் மற்றொரு ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாகம் ஸ்டேடியத்தில் இன்று சென்னை - ஹைதராபாத் அணிகள் மோதல்.
- மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதேபோல், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.