• சந்திரன், சூரியனை தொடர்ந்து வெள்ளிக் கோள்.. இஸ்ரோவின் அடுத்த இலக்கு.. முக்கிய நோக்கம் இதுதான்..


வெள்ளிக்கோளை ஆராய்வதற்கான சுக்ரயான் திட்டம் தயார் நிலையில் உள்ளதாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அடுத்தடுத்து மேற்கொள்ளும் ஆராய்ச்சி பணிகள், சர்வதேச அளவில் நாட்டின் மதிப்பை உயர்த்தி வருகின்றன. திட்டமிட்டபடி, சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு, சாதனை படைக்கப்பட்டது. அதன் ரோவர் 100 மீட்டருக்கு மேல் நிலவில் பயணித்து பல்வேறு தகவல்களையும் சேகரித்தது.  மேலும் படிக்க..



  • ’திருவள்ளூர் மண்ணில் தாமரை மலரும்’ – கூட்டணி முறிவை தொடர்ந்து பா.ஜ.க மேலிடம் மெசேஜ்..


தமிழ்நாட்டில் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேல் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து நாடாளுமன்ற  மற்றும் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொண்டது. இதைப்போன்று வருகிற நாடாளுமன்ற  தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மிகப்பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டது.  பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள்.  தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதில் இருந்தே, அதிமுக தலைவர்கள்  பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். மேலும் படிக்க.. 



  • பாஜகவுடன் கூட்டணி.. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் வரிசையில் இரண்டாக உடையும் தேவகவுடா கட்சி..


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக தலைமையிலான கூட்டணி முனைப்பு காட்டி வருகிறது. அதேநேரம், பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் இந்தியா கூட்டணி அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. மேலும் படிக்க..



  • வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் மறைவு.. பிரதமர், முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்..


வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமி நாதனின் மறைவிற்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவிற்குஆழ்ந்த இரங்கல். நமது தேசத்தின் வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டத்தில், விவசாயத்தில் அவர் செய்த திருப்புமுனையான பணி லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது மற்றும் நமது தேசத்திற்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்தது. விவசாயத்தில் அவர் ஆற்றிய புரட்சிகரப் பங்களிப்புகளுக்கு அப்பால், டாக்டர் சுவாமிநாதன் புதுமையின் ஆற்றல் மையமாகவும், பலருக்கு வழிகாட்டியாகவும் இருந்தார். மேலும் படிக்க..



  • காவிரி நீர் விவகாரம்: கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்: 430 தமிழ்நாடு பேருந்துகள் நிறுத்தம்..


தமிழகத்திற்கு காவிரி நதி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகா மாநிலம் முழுவதும்  இன்று முழு அடைப்பையொட்டி   430 தமிழக பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்கள் நேற்று நள்ளிரவு முதல் கர்நாடகாவிருக்கு செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க..



  • முதுமையான நாடாக மாறுகிறதா இந்தியா? ஐக்கிய நாடுகள் சபை அதிர்ச்சி தகவல்..


சுதந்திரம் பெற்று 77 ஆண்டுகள் ஆன பிறகும், இந்தியாவின் மிகப் பெரிய பலமாக பார்க்கப்படுவது அதன் இளைஞர்கள்தான். இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடு என்பதால், தேவைக்கேற்ப மனித வளத்தை பயன்படுத்தி கொள்ளும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது. ஆனால், தற்போது அதற்கு மிக பெரிய சவால் வந்திருக்கிறது. மேலும் படிக்க..