தமிழகத்திற்கு காவிரி நதி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகா மாநிலம் முழுவதும்  இன்று முழு அடைப்பையொட்டி   430 தமிழக பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்கள் நேற்று நள்ளிரவு முதல் கர்நாடகாவிருக்கு செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. 




காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இருக்கும் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தண்ணீர் திறந்து விட வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் கர்நாடகா அரசு தரப்பில் தண்ணீர் திறந்துவிட முடியாது என தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவின் படி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் செப்டம்பர் 26-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாண்டியா உள்ளிட்ட காவிரி படுகை பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாண்டியாவில் கடந்த 23 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. கடந்த 2 நாட்களுக்கு முன் நடைபெற்ற காவிரி ஒழுக்காற்று குழு கூட்டத்தில் தமிழகத்திற்கு  3000 கனஅடி தண்ணீர் திறந்துவிட பரிந்துரை செய்யப்பட்டது.    இது, தமிழ்நாடு விவசாயிகள் மத்தியில் நிம்மதியை தந்துள்ள நிலையில், ஒழுங்குமுறை குழுவின் உத்தரவுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.




இது தொடர்பாக சாமராஜநகரில் உள்ள எம்.எம்.ஹில்ஸில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, "காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவின் உத்தரவு குறித்து சட்ட நிபுணர்களுடன் விவாதித்திருந்தேன். அவர்களின் கருத்தின் அடிப்படையில், குழுவின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். தமிழ்நாட்டில் திறந்து விட கர்நாடகாவிடம் தண்ணீர் இல்லை. இந்த ஆண்டு மழை பெய்யாததால் மாநிலத்தில் உள்ள 195 தாலுகாக்கள் வறட்சியில் தத்தளிக்கின்றன" என்றார். 


இந்நிலையில இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் உள்ள முக்கிய விவசாய சங்கங்கள், கன்னட அமைப்புகள் ஆகியோர் இந்த மாநிலம் தழுவிய பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த பந்த் நடைபெறுகிறது.




தமிழகத்திற்கு காவிரி நதி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகா மாநிலம் முழுவதும்  இன்று முழு அடைப்பையொட்டி   430 தமிழக பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்கள் நேற்று நள்ளிரவு முதல் கர்நாடகாவிருக்கு செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 3000 கன அடி நீர் திறந்த விட வேண்டுமென என  காவிரி நீர் மேலாண்மை  ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் பாஜாகா, ஜேடிஸ் ஆகிய அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்புகள் கடந்த சில தினங்களாக  எதிர்ப்பு தெரிவித்து  போராட்டங்கள்   செய்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு பெங்களூரு முழுவுதும் கடையடைப்பு செய்து எதிர்ப்பு தெரிவித்தநிலையில், இரண்டாவது முறை கர்நாடகா மாநிலமுழுவதும் இன்று முழுஅடைப்பு செய்துவருகின்றனர். அதனையொட்டி அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க  தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஓசூர் வழியாக கர்நாடகாவுக்கு செல்லும் 430 அரசு பேருந்துகள் மற்றும் அனைத்து வாகனங்கள் நேற்று இரவு முதல்  நிறுத்தப்பட்டது. 


ஓசூரில் இருந்து பெங்களூரு, மாலூர் கோலார் ,கேஜிஎப், ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் செல்லாத நிலையில் தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு செல்லும் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.ஓசூர் மாநகர பேருந்துகள் மாநில எல்லையான ஜூஜூவாடி வரை இயக்கிவருகின்றனர்.