ISRO Venus Mission: சந்திரன், சூரியனை தொடர்ந்து வெள்ளிக் கோள்.. இஸ்ரோவின் அடுத்த இலக்கு, முக்கிய நோக்கம் இதுதானாம்..!

வெள்ளிக்கோளை ஆராயும் திட்டம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பில் புதிய மைல்கல்லாக இருக்கும் என நம்பப்படுகிறது.

Continues below advertisement

வெள்ளிக்கோளை ஆராய்வதற்கான சுக்ரயான் திட்டம் தயார் நிலையில் உள்ளதாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (ISRO) தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இஸ்ரோ திட்டம்:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் அடுத்தடுத்து மேற்கொள்ளும் ஆராய்ச்சி பணிகள், சர்வதேச அளவில் நாட்டின் மதிப்பை உயர்த்தி வருகின்றன. திட்டமிட்டபடி, சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு, சாதனை படைக்கப்பட்டது. அதன் ரோவர் 100 மீட்டருக்கு மேல் நிலவில் பயணித்து பல்வேறு தகவல்களையும் சேகரித்தது. தொடர்ந்து, ஆதித்யா எல்1ன் விண்கலமும் தனது பயணத்தை திட்டமிட்டபடி மேற்கொண்டுள்ளது. அடுத்த வருடம் இந்த விண்கலம் தனது ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வரும் இஸ்ரோவின் அடுத்த திட்டமாக, வெள்ளிக்கோளை ஆராயும் சுக்ரயான் திட்டம் உள்ளது.

சுக்ரயான் திட்டம்:

சூரிய மண்டலத்தில் உள்ள பிரகாசமான கிரகமான கோளான வெள்ளியை ஆராய்வதற்காக, திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் உறுதிப்படுத்தியுள்ளார். இதில் இடம்பெற உள்ள பே-லோட்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டு விட்டன எனவும் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள இந்திய தேசிய அறிவியல் அகாடமியில் உரையாற்றிய இந்திய விண்வெளி நிறுவன தலைவர் இந்த விவரங்களை தெரிவித்தார். இந்த திட்டத்திற்கு சுக்ரயான் திட்டம் என பெயரிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுக்ரா என்றால் சமஸ்கிருதத்தில் வெள்ளி என்று பொருள்படும்.

ஆராய்ச்சியின் நோக்கம் என்ன?

திட்டத்தின் நோக்கம் தொடர்பாக பேசிய சோம்நாத், “”வெள்ளிக்கோள் மிகவும் சுவாரஸ்யமானது. அதற்கும் வளிமண்டலம் உள்ளது. அது மிகவும் அடர்த்தியானதாக உள்ளது. இதனால், அதன் மேற்பரப்பை ஊடுருவுவது அவ்வளவு எளிதானது அல்ல.  வெள்ளிக்கோளை படிப்பது நமது சொந்த கிரகத்தின் எதிர்காலத்தைப் பற்றிய முக்கியமான நுண்ணறிவுகளை வழங்கும். பூமி ஒரு நாள் வெள்ளி கோளாக இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமி தனது குணாதிசயங்களை மாற்றிக் கொள்ளலாம். பூமி முன்பு இப்படி இருந்ததில்லை. நீண்ட காலத்திற்கு முன்பு அது வாழத் தகுதியான இடமாக இல்லை” என கூறினார். இதனால் அடுத்த சில வருடங்களில் இஸ்ரோவின் சுக்ரயான் திட்டம் செயல்வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கோள் ஆராய்ச்சி கடினம் ஏன்?

வெள்ளிக் கோளின் வளிமண்டலம் தடிமனாகவும் அமிலங்கள் நிறைந்ததாகவும் உள்ளது. அதோடு,  வளிமண்டல அழுத்தம் பூமியை விட 100 மடங்கு அதிகமாக உள்ளது. அதோடு, சூரியக் குடும்பத்திலேயே மிகவும் பிரகாசமான கோளான வெள்ளிக்கோளில், வெப்பநிலையும் அதிகமாக உள்ளது. இது ஆய்வுக்கு சவாலான சூழலாக அமைகிறது.

இந்தியாவின் திட்டம்:

இதனிடையே,  பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு வெள்ளிக் கோளில் லேண்டரை தரையிறக்கிய ஒரே நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது. ஆனால், அந்த லேண்டர் ஒரு சில விநாடிகள் மட்டுமே செயல்பட்டு தகவல்களை சேகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதைதொடர்ந்து, 2030-களில் வெள்ளிகோளை ஆர்பிட்டர் மிஷன் மூலம் ஆராய நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. கிரகங்களுக்கு இடையிலான திட்டமாக மங்கள்யான் திட்டத்தை, இந்தியா ஏற்கனவே வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. அந்த வரிசையில் சுக்ரயான் திட்டமும் இடம்பெற உள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola