தமிழ்நாடு:



  • சனாதனத்தை யாராலும் அழிக்க முடியாது. முடிந்தால் முயற்சி செய்யுங்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவி சவால்

  • தமிழ்நாடு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக மரணம் - பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் 

  • நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவை வலுப்படுத்துவோம் என குன்னூரில் நடந்த பாதயாத்திரை நிகழ்ச்சியில் மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு 

  • அதிமுக தலைவர்கள் பற்றி தொடர்ந்து விமர்சனம் செய்ததால் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டோம் - கே.பி.முனுசாமி பேட்டி 

  • விரைவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என அமைச்சர் சேகர் பாபு தகவல் 

  • திருப்போரூரில் எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு அணிவிப்பு - அதிமுகவினர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு 

  • தொடர் விடுமுறை எதிரொலி - சொந்த ஊருக்கு படையெடுத்த மக்களால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் 

  • முதல்வர் வேட்பாளர் விவகாரத்தால் தான் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு - ஓபிஎஸ் தரப்பினர் கடும் விமர்சனம் 

  • 3வது முறையாக பாஜக ஆட்சியை பிடிக்கும், தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு 

  • பாஜக மாநில  மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடம் அக்டோபர் 3 ஆம் தேதி மாநில தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் 

  • ரூ.9000 கோடி வரவு வைக்கப்பட்ட விவகாரம் - தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சிஇஓ திடீர் ராஜினாமா


இந்தியா:



  • தமிழகத்திற்கு காவிரி நீர் தர எதிர்ப்பு - கர்நாடகா முழுவதும் மாநிலம் இன்று முழு அடைப்பு போராட்டம் 

  • காவேரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் பந்த் அறிவிப்பு : 430  தமிழக பேருந்துகள் நிறுத்தம்

  • அதிமுக கூட்டணி முறிவு குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என தேசிய தலைமை பாஜக மாநில தலைமைக்கு அறிவுறுத்தியிருப்பதாக தகவல்

  • காவிரி நீர் விவகாரம் - பட ப்ரோமோஷனுக்காக பெங்களூரு சென்ற நடிகர் சித்தார்த்தை மிரட்டிய கன்னட அமைப்பினர்

  • மணிப்பூர் முதலமைச்சர் வீட்டை தாக்க முயற்சி - போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 

  • ஆசிய போட்டியில் அடுத்தடுத்து பதக்கங்களை வெல்லும் இந்திய வீரர்கள் - நாடே பெருமை கொள்வதாக பிரதமர் மோடி பாராட்டு


உலகம்:



  • நாஜி படை வீரருக்கு நாடாளுமன்றத்தில் கௌரவம் - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்க மன்னிப்பு கோரினார்

  • அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என வட கொரிய நாடாளுமன்றத்தில் அதிபர் கிம் ஜாங் உன் பேச்சு

  • அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கனுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று சந்திப்பு

  • காலநிலை மாற்றம் காரணமாக அமேசான் காடுகளில் கடும் வறட்சி ஏற்படும் என எச்சரிக்கை 

  • பாகிஸ்தானில் ஒரே நேரத்தில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி 

  • நெல்சன் மண்டேலாவின்  பேத்தி புற்றுநோயால் மரணம் - சமூக வலைத்தளங்களில் பலரும் இரங்கல் 


விளையாட்டு:



  • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி போட்டிகள் இன்று தொடக்கம்: முதல் நாளில் 3 ஆட்டங்கள் நடைபெறுகிறது

  • உலகக்கோப்பை அணி தேர்வு விவகாரம் தொடர்பாக வங்கதேச அணியின் தமிம் இக்பால் மீது சக வீரர் ஷகிப் அல்-ஹசன் சாடல்

  • ஆசிய போட்டியில் அடுத்தடுத்து பதக்கங்களை வென்று அசத்தும் இந்திய வீரர்கள் - பதக்க பட்டியலில் 5வது பிடித்தது

  • ஒருநாள் உலகக் கோப்பையை தென்ஆப்பிரிக்க அணியால் வெல்ல முடியும் - வேகப்பந்து வீச்சாளர் ரபாடா நம்பிக்கை

  • உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் அக்ஸர் படேலுக்கு பதிலாக அஸ்வின் சேர்ப்பு