- Cauvery Water: இதற்குமேல் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது - கர்நாடக அரசு திட்டவட்டம்..
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் 53% மழை பற்றாக்குறை நீடிக்கிறது என்றும் இதற்கு மேல் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது என்றும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் கர்நாடக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனால் பெங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக தமிழகத்திற்கும் கர்நாடாகவுக்குமான தண்ணீர் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. பருவ மழை பிரச்சனையை காரணம் காட்டி தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகாவும் காவிரி மேலாண்மை வாரியம் ஆணைக்கிணங்க தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழகமும் வாதத்தை முன்வைத்து வருகின்றன. மேலும் படிக்க
- 2024 MP Election: 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்கிறோம் - ஜவாஹிருல்லா அறிவிப்பு
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில்தான் தேர்தலைச் சந்திக்கவுள்ளதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் I.N.D.I.A கூட்டணி வலுவாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் உள்ள தேசிய அளவிலான கட்சிகளும் மாநில அளவிலான கட்சிகளும் 2024ஆம் ஆண்டு நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலை இரண்டு கூட்டணிகளாக அமைந்து தேர்தலைச் சந்திக்கவுள்ளது. அதில் ஆளும் பா.ஜ.க., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பல கட்சிகளும், எதிர்கட்சிகளில் பெரும்பான்மையான கட்சிகள் இணைந்து I.N.D.I.A என்ற பெயரிலும் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் படிக்க
- India - Bharat Row: ஐ.நா கூட்டத்தில் இந்தியாவுக்கு பதில் பாரதம் - மத்திய அமைச்சர் பேசியது என்ன?
அமெரிக்காவில் நடைபெற்ற ஐ.நா பொதுச் சபையின் உயர்மட்ட கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் இந்தியா என்ற சொல்லுக்கு பதிலாக பாரதம் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அமெரிக்கா, சீனா, இந்தியா உள்பட உலகின் வலுவான 20 நாடுகளின் தலைவர்களும், சிறப்பு விருந்தினர்களும் பங்கேற்கும் ஜி20 மாநாடு டெல்லியில் நடைபெற்றது. ஜி 20 மாநாட்டிற்கான அழைப்பிதழில் வழக்கமாக இடம்பெறும் இந்தியப் குடியரசு தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டு இருந்தது. மேலும் படிக்க
- America -Srilanka-China: இலங்கை வருகிறதா சீனாவின் உளவு கப்பல்? - அமெரிக்கா வெளிப்படுத்தும் கவலை
சீனக் கடற்படையின் யுவான் வாங்-5 கடந்தாண்டு இலங்கையின் அம்பந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தது. இது ஆராய்ச்சி கப்பல் என கூறப்பட்டாலும், உளவுக் கப்பலாகவும் செயல்படும் என பல்வேறு தரப்பினராலும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில் தான், யுவான் வாங் - 5 கப்பலை தொடர்ந்து ஷி யான் 6 எனும் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் அடுத்த மாதம் இலங்கை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின் போது, தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்துடன் (NARA) இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. மேலும் படிக்க
- Rahul Gandhi Train: சின்னதா ஒரு ரயில் பயணம்.. மக்களுடன் மக்களாய் பயணித்த ராகுல் காந்தி.. சுவராஸ்ய நிகழ்வு
கடந்த 9 ஆண்டுகளில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு காங்கிரஸ் பெரும் சரிவை சந்தித்த நிலையில், கட்சியை மீட்டெக்கும் வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர் முயற்சிகளை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, 146 நாள்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டார். நடைபயணத்தில் பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இதை தொடர்ந்து, கர்நாடக தேர்தலை முன்னிட்டு உணவை டெலிவரி செய்யும் நபருடன் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தார். மேலும் படிக்க