தமிழ்நாடு:



  • ஆளுநரின் ஒப்புதலின்றி துணைவேந்தரை தேர்ந்தெடுக்கும் குழுவை அமைக்க உயர்கல்வித்துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி

  • சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 14 ஆம் தேதி  மகளிர் உரிமை மாநாடு  -  சோனியா, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் 

  • நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவிப்பு 

  • மக்களவை தேர்தலில் திமுக உடனான கூட்டணி தொடரும் - விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு அறிவிப்பு

  • பாஜக வேண்டாம், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என புரட்சி பாரதம் கட்சி அறிவிப்பு

  • மிலாடி நபி, காந்தி ஜெயந்தி, வார இறுதி என தொடர்  விடுமுறைகள் வருவதால் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் 1100 சிறப்பு பேருந்துகள் இயக்கம் 

  • போக்சோ சட்டத்தில் புகார் அளிக்கும் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெயர், அடையாளம் ஆகியவை காக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல் 

  • சுற்றுலாத் துறையில் தமிழ்நாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்ட “தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023  வெளியீடு 

  • சென்னை புறநகரில் 100 ஏக்கரில் தீம் பார்க் - 5 ஆண்டுகளில் திறக்கப்படும் என “தமிழ்நாடு சுற்றுலா கொள்கை  2023”  கீழ்  அறிவிப்பு 

  •  தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 1ஆம் தேதி சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

  • தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் - பதிலடி கொடுத்த தமிழ்நாடு விவசாயிகள் 

  • மற்ற மதங்களை மதிப்பதுதான் சனாதனம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீண்டும் விளக்கம் 

  • அளவுக்கதிகமான பாஸ் கோரிக்கைகள், பாதுகாப்பு பிரச்சினை காரணமாக லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு


இந்தியா:



  • தமிழ்நாட்டிற்கு காவிரி தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் முழு அடைப்பு போராட்டம் - மாலை 6 மணிக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்பட்டது 

  • ரூ.15 ஆயிரம் கோடி நிதி நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்து பிரதமர் மோடிக்கு 50 லட்சம் கடிதங்களை அனுப்ப திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு

  • மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டதால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் - பள்ளிகளை மூட அரசு உத்தரவு

  • மத்திய அரசு திட்டங்களில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், ஊழல் தடுக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி பேச்சு

  • கொலீஜியத்தின் 70 பரிந்துரைகளை மத்திய அரசு  நிலுவையில் வைத்திருப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது

  • காலை 9.30 மணிக்குள் அமைச்சர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் அலுவலகம் வர வேண்டும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உத்தரவு 

  • மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் -  இன்று மணிப்பூருக்கு விரைகிறது சிபிஐ சிறப்பு இயக்குநர் தலைமையிலான குழு
      


உலகம்:



  • சீன உளவு கப்பல் இலங்கை வருவது தொடர்பாக அந்நாட்டு அரசிடம் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளதாக தகவல்

  • சீனாவின் எச்சரிக்கையை மீறி ஆஸ்திரேலிய எம்.பி.க்கள் குழு தைவான் சுற்றுப்பயணம்  

  • அசர்பைஜானில் கேஸ் நிலையம் தீப்பிடித்து 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு - 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்

  • அதிவேக இணைய சேவைக்காக 22 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் 


விளையாட்டு:



  • உலகக்கோப்பையும் நாடு திரும்புவோம் என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை

  • உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு 

  • இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது

  • ஆசிய விளையாட்டு தொடரில் குதிரையேற்றத்தில் தங்கம் வென்று இந்தியா சாதனை 

  • உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு உற்சாக வரவேற்பு